.

Pages

Sunday, July 26, 2015

குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் சிறப்பு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் இருவார முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து  அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
மாநிலத்தில் 60 முதல் 80 ஆயிரம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகின்றனர்.  அதிக பாதிப்பினால் இறப்பும் நேரிடுகின்றது. வயிற்றுப்போக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் மூலமாகவும் மேலும் பல வேதிப்பொருள்கள் மூலமாகவும் உண்டாகின்றது. திறந்தவெளி மலம் கழித்தல் முற்றிலும் தவிர்த்து சுகாதார கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும்   நன்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை பருக வேண்டும்.   ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுத்தமின்மையை கடைப்பிடிக்க வேண்டும்.  ஈ மொய்த்த பண்டங்களை உட்கொள்ளக் கூடியது.  தகுந்த முறையில் தகுந்த வேளைகளில் கைகளை கழுவுதல் கடைப்பிடிக்க வேண்டும்.  சூடான உணவையே உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு (6 மாதம் வரை) மற்ற உணவினை தவிர்த்து தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.  சமைத்த உணவினை மூடிவைத்தல் வேண்டும்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வீடு வீடாக சென்று வாய்வழி உப்பு, சர்க்கரை பொட்டலங்கள் (ழுசுளு பாக்கெட்) வழங்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவ மனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அனைத்திலும் (ORS பாக்கெட்)  வழங்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  எந்நேரத்திலும் பொது மக்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட உள்ளது.
 
அனைத்து தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு இந்நோய் மற்றும் அதனை தடுப்பதற்குரிய ஆலோசனைகள் பற்றிய விழிப்புணர்வினை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் ஏற்படுத்தப்படும்.  வயிற்றுப் போக்கு ஏற்படும் சமயங்களில் உப்பு சர்க்கரை கரைசலுடன் ஜிங்க் மாத்திரை வழங்கப்படும்.

தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தம் தாய்ப்பாலின் மூலம் தான் ஏற்படுகிறது. தாய்ப்பால் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய அதிக சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பொருளாகும்.  சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதினால் குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.    6 மாதம் வரை குழந்தைகளுக்கு எந்த இணை உணவும் தேவையில்லை.  தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும்.  தாய்ப்பால் குழந்தையின் தேவைக்கேற்ப கொடுக்க வேண்டும்.  தாய்ப்பால் கொடுக்கும் போது, ஒரு மார்பக பகுதி முழுவதும் கொடுத்த பிறகு தான் அடுத்த பகுதியில் கொடுக்க வேண்டும்.   குழந்தை எந்தவித நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,12,304  குழந்தைகளுக்கு ORS பாக்கெட் வழங்கிட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் போக்கு மற்றும் ஊட்டச் சத்து குறைபாடுவுள்ள குழந்தைகளுக்கு ORS கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்படும்.   எனவே பொது மக்கள் வயிற்றுபோக்கினால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் உயிரிழப்பினை தவிர்க்க உப்பு மற்றும் சர்க்கரை கரைசல் ழுசுளு மற்றும் துத்தநாக மாத்திரைகள் ( ZINC ) தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விபரங்களை கருத்தில் கொண்டு இந்நோயினை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 27.07.2015 முதல் 08.08.2015 வரை தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே பொது மக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அனைத்திலும் இருவார முகாம்களில் பங்கேற்று தங்கள் உடலில் உள்ள உபாதைகளை சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் தஞ்சை மாநகர மேயர் திருமதி.சாவித்திரிகோபால், பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, ஒன்றியக்குழு தலைவர்கள் திரு.கோவிந்தராஜன் (ஒரத்தநாடு), திருமதி.மலர்கொடி தமிழரசன் (திருவையாறு), திருமதி.சாந்தி அசோக்குமார் (பேராவூரணி), திரு.கோபிநாதன் (பாபநாசம்), இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, பொது சுகாதாரம் துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. பாக்கியலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலர் திரு.இரா.இரவிச்சந்திரன், மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.