.

Pages

Saturday, July 25, 2015

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி கடந்த 11.07.2015 அன்று தொடங்கியது.

 25.07.2015 சனிக்கிழமை அன்று மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு தெரிவித்ததாவது.

"விலையில்லா அரிசி, கறவை மாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்ஸி, மி;ன்விசிறி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவர்களுக்கு மடிக்கணினி, 14 வகையான கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டிகள்,  மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம்  செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனாளிகளுக்கு வழங்கிய  விபரங்களை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.  இவற்றை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையினர்  புகைப் படங்களாக பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.  மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சிகள் வைக்கப்பட்டு வருகின்றது.  சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையினருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியை இதுவரை 1 இலட்சத்து 50 ஆயிரம் பொது மக்கள் மற்றும் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். " என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவ+ர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய வங்கி கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை.திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.ஆர்.காந்தி, மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் திரு.வி.பண்டரிநாதன், துணைத் தலைவர் திரு.வேங்கை கணேசன், ஒன்றியக்குழு தலைவர் திரு.லெட்சுமணன், நிலவள வங்கி தலைவர் திரு.துரை.வீரணன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.அறிவுடைநம்பி, துணைத் தலைவர் திரு. புண்ணியமூர்த்தி, வல்லம் பேரூராட்சித் தலைவர் திரு.சிங்ஜெகதீசன், இராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கோவி. மனோகரன்,  மாநகர மன்ற உறுப்பினர் திரு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.