தஞ்சையில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகம் பெருந்திட்ட வளாகம் கீழ்த்தளத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள், முன்னோடிகள்,மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும், நீர்பாசனம், கால்நடை,கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப்பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுபவர்கள், காலை 09:00 மணி முதல் 10:00 வரை கணினியில் பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.