.

Pages

Thursday, July 23, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி காதிர் முகைதீன்
கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.

விழாவிற்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ ஜலால் தலைமை வகித்து உரை ஆற்றினார். காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் துணை முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் துவக்க உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வரும்,வேதாரண்யம் பாயின்ட் கலிமேர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி தாளாளருமாகிய முனைவர் ஏ. முஹம்மது அப்துல் காதர் மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூத்த முதல்வர் பேராசிரியர் எஸ். பர்கத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியருமாகிய முனைவர் எஸ். ரவீந்தரன் வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் காதிர் முகைதீன் கல்லூரியின் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் ஏ. அக்பர் ஹுசைன் அவர்கள் 'உலக வெப்பமயமாதல்' என்ற தலைப்பிலும், மாசு கட்டுப்பாடு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து முனைவர் பி. முஹம்மது சிராஜுதீன் அவர்களும், நானோ தொழில்நுட்பம் குறித்து முனைவர் என்.எம்.ஐ அல்ஹாஜ் அவர்களும், கம்ப்யூட்டர் அறிமுகம் குறித்து உதவி பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர் அவர்களும், தகவல் தொழில் நுட்பம் குறித்து பேராசிரியர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் அவர்களும், உயிரியல் தொழில்நுட்பம் குறித்து முனைவர் ஏ. அம்சத் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ராஜா முஹம்மது நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரை நிகழ்த்தினார்.

விழா முடிவில் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஓ. சாதிக் நன்றி கூறினார். விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

 
 
 
 









 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.