வளைகுடா என்றதும் பெட்ரோலோடு பேரீச்சம் பழமும் நம் நினைவுக்கு வரும் இந்நிலையில் அபுதாபி அருகே அல் கர்பியா பகுதியின் லிவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் லிசா பேரிச்சம் பழம் பெஸ்டிவல் புகழ் பெற்ற நிகழ்வாகும். இவ்வருடத்திற்கான விழா கடந்த 22-ம்தேதி தொடங்கியது. வரும் 30-ம்தேதி வரை 8 நாட்கள் நடைபெறும். இதில் வகை வகையான பேரீச்சம் பழங்கள் காண்போர் மனதை கவரும் வண்ணம் இடம்பெறும். இங்கு வித விதமான பேரீச்சம் பழ கண்காட்சி நடத்தப்பட்டு அமீரகத்தின் பேரீச்சம் பழ விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் உற்பத்தி செய்த பேரீச்சபழங்களை பார்வைக்கு வைப்பார்கள். சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்களை நடுவர்கள் தேர்வு செய்த பின்னர், அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் உள்நாட்டில் உற்பத்தியான மற்ற பழங்களும் பார்வைக்கு வைக்கப்படும். இதில் இடம் பெற்ற சிறந்த மாம்பழம் ,சிறந்த எலுமிச்சை பழம் ஆகியவற்றுக்கும் சிறந்த மாதிரி பண்ணைக்கான விருதும் வழங்கப்படும். மேலும் பல்வேறு விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடு போட்டி, கவிதை, வினாடி வினா, விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சுமார் திர்ஹம் 6 மில்லியன் அளவுக்கு 220 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அரசாங்கத்தின் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விழாக்கள் குழு இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.