தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்திரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.ஆ.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதல் படியும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 10.07.2015 அன்று ஆய்வு செய்யப்பட்டன.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில், தாமரங்கோட்டை வடக்கு, தெற்கு, துவரங்குறிச்சி, நம்பிவயல் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் மேல்தொட்டிகள் தூய்மை செய்யப்படுவதை, பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கு.அறிவழகன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.சந்திரசேகரன், கே.பாஸ்கரன், வி.ரவிச்சந்திரன், எஸ்.வி.முத்துசாமி, கே.காசிநாதன், எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கு. அறிவழகன் கூறும்போது...
“உள்ளாட்சி துறையினர் மாதந்தோறும் 10,25 தேதிகளில் மேல்நிலைத் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள், தரைமட்ட தொட்டிகள் அனைத்தையும் பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்து, உலரவைத்து பின்னர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். நீர் ஆதாரங்களுக்கு அருகிலும் (ஆறு, ஏரி, கண்மாய்கள், ஆழ்துளை கிணறுகள், குளங்கள், கிணறுகள்) நிலத்தடி நீர் தேக்கத் தொட்டிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் போன்றவற்றுக்கு அருகிலும் மனிதக்கழிவுகள் மற்றும் மிருகக்கழிவுகள் ஏற்படுத்தும் அசுத்தங்களால் குடிநீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் நிலத்தடி நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரினேசன் செய்ய பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் தரம் 33%-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
1000 லிட்டர் குடிநீருக்கு 4 கிராம் பிளிச்சிங் பவுடர் என்கிற விகிதத்தில் எடுத்து அதனை வாளியில் உள்ள தூய்மையான நீரில் கலந்து கரைசல் தயாரித்து 10 நிமிடம் கழித்து அதிலிருந்து பெறப்படும் குளோரின் கரைசலை நீர்தேக்க தொட்டிகளில் கலந்து குளோரின் குடிநீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கு ஏதுவாக, அரை மணி நேரம் கழித்து, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். கடைசி குடிநீர் குழாயில் குளோரின் 0.2 பி.பி.எம் அளவு இருக்குமாறு குளோரின் செய்யப்பட வேண்டும். (ஒவ்வொரு முறையும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு முன்பு கட்டாயம் குளோரினேசன் செய்யப்படுதல் வேண்டும். இது மிகவும் முக்கியம்)
பொதுமக்கள் உடைந்த குடிநீர் குழாய்களிலும் அல்லது அதன் அருகில் குழிதோண்டி தண்ணிர் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். தரைக்கு கீழ் கழிவுநீர் வாய்க்கால் அருகில் அல்லது அதன் அடியில் உள்ள குழிக் குழாய்களை மூடிவிட்டு மாற்றாக குழாயை தரைக்கு 2 அடி உயரத்தில் அமைத்திட வேண்டும். இல்லையெனில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் போது நாய், எலி மற்றும் மனித கழிவுகளால் குடிநீர் மாசுபடும். மாசுபட்ட குடிநீர் குழாய்களால் உறிஞ்சப்படும் பொழுது மாசுபட்ட குடிநீரினால் வயிற்றுபோக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள்காமாலை மற்றும் லெப்டோ பைரோசிஸ் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல்கள் அவ்வப்பொழுது கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்தல் வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை யெனில் நுண்ணுயிர் ஏடு குடிநீர் குழாய்களில் ஏற்படும். இதனால் குடிநீரில் பயன்படுத்தப்படும் குளோரின் அளவானது அதிகமாக தேவைப்படும். தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உள்ளது என்றார். பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.