.

Pages

Wednesday, July 29, 2015

அதிரையில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் தாழங்காய் !

அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் தாழங்காய்களுக்கு ஜப்பானில் நல்ல மவுசு உள்ளது. அதிரையை சுற்றியுள்ள முடுக்குகாடு, கரிசக்காடு, மாலியக்காடு, மகிழங்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களின் காட்டுப்பகுதியில் தாழை மரங்கள் தானாகவே வளர்கின்றன. இவற்றில் இருந்து கிடைக்கும் தாழங்காய்கள், வீட்டு விசேஷங்களில் பந்தல்களில் தேங்காய், நுங்கு, பாக்கு குலைகள் போல இவற்றையும் தொங்க விடுவார்கள். மற்றபடி இங்கு பெரிய அளவில் இதன் உபயோகம் இல்லை. அதே நேரத்தில் இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு அங்கு நல்ல மவுசு உள்ளது.

இது குறித்து அதிரையை சேர்ந்த வினோத் நம்மிடம் கூறியதாவது...
'தாழங்காய்கள் தூத்துக்குடியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. இதற்காக தூத்துக்குடி வியாபாரிகள் இங்கு வந்து டன் 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி செல்கிறார்கள். அங்கு அலங்கார பொருட்கள் செய்து மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. தாழங்காய்கள் சேகரிப்பது மிகவும் கடினமானது. தாழை மரத்தில் முட்கள் மத்தியில் இந்த காய் இருக்கும். அத்துடன் தாழம்பூ வாசனைக்கு பாம்புகளும் அதிகம் வரும். அதையெல்லாம் கடந்து தான் இவற்றை பறிக்கிறோம். இதன்பின்னர் சிறு துண்டுகளாக இவற்றை உடைத்து ஒருவார காலம் வெயிலில் உலர்த்தி காய வைத்து அனுப்புகிறோம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.