.

Pages

Wednesday, July 29, 2015

அதிரை அருகே ரெட் கிராஸ் நடத்திய முதலுதவி பயிற்சி முகாம் !

மாநில ஊரக வளர்ச்சி செயல்படுத்தி வரும் சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டத்தின் கீழ் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்த பயிலரங்க நிகழ்ச்சி இன்று காலை அதிரை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை பி. பானுமதி முன்னிலை வகித்தார். சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத்திட்டம் குறித்து மாவட்ட அலுவலர் திரு. ஜெயசீலன் பேசினார்.

பயிற்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பயிற்றுனர் திரு. துளசி துரை மாணிக்கம் அவர்கள் முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சி முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி உமா தேவி நன்றி கூறினார்.

இந்த திட்டம் தஞ்சை மாவட்ட கடலோரப்பகுதிகளின் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிரலரங்க நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.