.

Pages

Wednesday, July 29, 2015

பட்டுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் !

பட்டுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார்.

ஆர்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, எம்.ராமச்சந்திரன் மற்றும் நகர, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேட்டூர் அணையை உடனடியாகத் திறந்து விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாதியில் நிற்கும் புறவழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் த.மனோகரன் நன்றி கூறினார்.

1 comment:

  1. தன் கடைசி மூச்சைக் கூட, மாணவர் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நிறுத்தியவர், அக்னி நாயகன் அப்துல் கலாம், இந்தியா 7 நாள் துக்கம் அனுசரிக்கப் படும் என்று அறிவித்திருக்கு; ஏன் அமெரிக்க கூட தன் நாட்டு கொடியை அர கம்பத்தில் பறக்க விட்டு தன் அஞ்சலியை செலுத்தி இருக்கும் போது; இவர்களால் கட்சி கொடியை தூக்காமல் இருக்க முடியாதா? இந்தியாவே கண்ணீரில் மூழ்கி இருக்கும்பொழுது தமிழ் நாடு TASMAK மூடாமல் தண்ணீரில் மூழ்கி இருப்பது வேதனையிலும் வேதனை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.