.

Pages

Tuesday, July 28, 2015

கலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்!

 
ராமேஸ்வரம்: நாட்டின் 11 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி தான் பிறந்த ராமேஸ்வரத்தை முன்னேற்றுவதில் பெரும் பங்கி வகித்தார். அவரது திடீர் மரண செய்தி ராமேஸ்வரத்தில் காட்டு தீ போல் பரவியது. கலாமின் மரணம் பற்றிய செய்தி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது அண்ணன் முகம்மது முத்து மீரா லெப்பை மரக்காயர் இல்லத்திற்கு இரவு 7 மணியளவில் வந்தது. இதனை உறுதி படுத்தி கொள்ளும் முன்பே அவரது வீட்டின் முன்பு பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் பதட்டத்துடன் கூடினர்.

கலாமின் மூத்த சகோதரரின் பேரன் சலீம், கலாம் இறந்த செய்தியை பொதுமக்கள் முன் சொல்ல முடியாத சோகத்துடன் கண்ணீர் சிந்தியபடியே தெரிவித்தார். இதனை கேட்ட பொதுமக்கள் அனைவரும் கண்கலங்கியபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி கொண்டிருந்தனர். இந்நிலையில் 92 வயதுடைய முகம்மது முத்து மீரா மரைக்காயரிடம் தனது தம்பி கலாம் காலமான செய்தியை உறவினர்கள் எடுத்து சொல்ல அவரது கண்களில் இருந்து கண்ணீர் அவரை அறியாமலே வடிய தொடங்கியது.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் - முகம்மது ஆசியா அம்மாள் தம்பதியரின் 5 பிள்ளைகளில் மூததவர் முத்து முகம்மது மீரா. கடைக்குட்டி டாக்டர் அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்க நாட்டுக்காகவே உழைத்த கலாமின் உறவு ராமேஸ்வரம் தீவு மட்டுமே.  கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். இறப்புக்கு முதல் நாள் மாலை தனது சகோதரர் மற்றும் பேரன் சலீம் ஆகியோரிடம் பேசியுள்ளார். அப்போது தனது பெயரில் இயங்கும் அருங்காட்சியத்தினை பற்றியும். அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அருங்காட்சியக்கத்தில் விற்பனையாகி வரும் புத்தகங்கள் குறித்தும் ஆர்வமுடன் விசாரித்துள்ளார். விரைவில் ராமேஸ்வரம் வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  அதற்கும் இந்த சோகம் நிகழ்ந்து விட்டது.

அப்துல்கலாமின் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் உடல்கள் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல அப்துல்கலாமின் உடலையும் ராமேஸ்வரத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பது கலாமின் சகோதரர் மற்றும் உறவினர்கள், உள்ளூர் மக்களின் விருப்பமாக உள்ளது . இதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பதை வேண்டுகோளாக தெரிவிப்பதாக கலாமின் பேரனும், கலாம் அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருபவருமான சலீம் தெரிவித்தார்.

இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
நன்றி:விகடன்

8 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    அன்னாரின் எல்ல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தினை வழங்குவானாக...ஆமீன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    அன்னாரின் எல்ல பாவங்களையும் மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்கத்தினை வழங்குவானாக...ஆமீன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.