அதிரை லயன்ஸ் சங்கம் 2015-2016 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி அதிரை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.
லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் மேஜர் முனைவர் எஸ்.பி. கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ். முஹம்மது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். இதில் தலைவராக என். ஆறுமுகச்சாமி, செயலராக எம்.முஜிபுர் ரஹ்மான்,பொருளாளராக எஸ்ஏசி இர்ஃபான் சேக் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
லயன்ஸ் சங்க மண்டல தலைவர் வி.வி.கே. ராமமூர்த்தி, வட்டார தலைவர் இரா. இராஜாராம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.நெய்னா முஹம்மது, எஸ்.எம் முஹம்மது மொய்தீன், பேராசிரியர் கே. செய்யது அஹ்மது கபீர், எம். அஹமது, டி.பி.கே ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன்ஸ் சங்க புதிய தலைவராக பொறுப்பேற்ற என் ஆறுமுகச்சாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
முன்னதாக லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல்ஹாஜ் அவர்கள் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவை திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு கூறினார்.
நிகழ்ச்சியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை மேடைக்கு வரவழைக்கப்பட்டு பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் லயன்ஸ் சங்க செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க தலைவர் எம். சாகுல் ஹமீது, செயலர் பேராசிரியர் அல் ஹாஜ், பொருளாளர் என்.ஆறுமுகச்சாமி மற்றும் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பத்திரிக்கையாளர்கள், சாதனை நிகழ்த்திய மாணவ மாணவிகள், பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.