.

Pages

Tuesday, July 21, 2015

சவூதி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு !

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவனைகளில் பணியாற்றுவதற்காக அலோபதி மருத்துவர்கள் தேவை என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்க அலோபதி மருத்துவர்களுக்கான ( பல் மருத்துவம் மற்றும் பேதாலஜி நீங்கலாக ) புதுடில்லி, பெங்களுரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் 27.7.2015 முதல் 5.08.2015 வரை நேர்முகத் தேர்வு  நடைபெற உள்ளது.

இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கண்சல்ட்ண்டுகள் ( Consultants ) சிறப்பு மருத்துவர்கள் ( Specialist  ) 45 வயதிற்குட்பட்ட எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் ( General Practitioner ) விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்படும் ரெசிடெண்ட் மருத்துவர்கள் வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.75,000 முதல்  ரூ.1.20 இலட்சமும், சிறப்பு மருத்துவர்கள் முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2.53 இலட்சம் முதல் 4.20 இலட்சமும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று அனுபவத்திற்கேற்ப ரூ.1.51 இலட்சம் முதல் ரூ.2.50 இலட்சமும், கண்சல்டண்ட்  மருத்துவர்களுக்கு முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.4.11 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.24 இலட்சம் வரையிலும், வளரும் நாடுகளில் பட்டம் பெற்று பணி அனுபவத்திற்கேற்ப ரூ.2 இலட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3.26 இலட்சமும் ஊதியம் வழங்கப்படும்.  மேலும் இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியுமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பித்தினை ovemcldr@gmail.com என்ற இமெயில முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 044-22502267 /  22505886 / 08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணைய தளத்திலும் அறிந்து கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.