அதிரையில் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள், நகை தொழிளாலர்கள் நல சங்கம், கரையூர் தெரு கிராம மீனவர்கள், மகிழங்கோட்டை கிராம ஊராட்சி மன்றம் ஆகியவற்றின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியை தங்கம், வெள்ளி நகை உரிமையாளர்கள் நல சங்க அமைப்பாளர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா துவக்கி வைத்து அப்துல் கலாம் அவர்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். தங்கம், வெள்ளி நகை உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் தேவந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காந்திநகர் கவுன்சிலர் காளிதாஸ் அப்துல் கலாம் குறித்து சிறப்புரை வழங்கினார்.
முன்னதாக பேரணி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, கடைத்தெரு, ஜாவியா ரோடு வழியாக ஈசிஆர் சாலை வரை புறப்பட்டு இறுதியில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பேரணியில் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள், நகை தொழிளாலர்கள் நல சங்கம் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கரையூர் தெரு கிராம மக்கள் நடத்திய அமைதி பேரணி:
கரையூர்தெரு கிராமத்தினர் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் கரையூர் தெரு கிராம பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் பாஞ்சாலன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் கிராம பஞ்சாயத்தினர் தலைமை வகித்தனர். பேரணி மாரியம்மன் கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு வண்டிப்பேட்டை, சேர்மன் வாடி வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில் கரையூர் தெரு கிராமத்தினர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் அப்துல் கலாம் மறைவையொட்டி இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மகிழங்கோட்டையில் நடைபெற்ற அமைதி பேரணி:
அதிரை அடுத்துள்ள மகிழங்கோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவாஜி என்கிற சுப்பு ஆறுமுகம் தலைமை வகித்தார். பேரணி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறபட்டு அப்பகுதியின் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பியது. பேரணி முடிவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மகிழங்கோட்டை கிராம பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.