.

Pages

Thursday, July 23, 2015

குப்பை கிடங்காக மாறி வரும் சிஎம்பி லேன் வாய்க்கால் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் அன்றாடம் சேரக்கூடிய குப்பை கூளங்களை சிஎம்பி லேன் வாய்க்கால் பள்ளத்தில் கொட்டுவதால் புதிய குப்பை கிடங்கு உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஆஷிப் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த இரண்டு நாட்களாக சிஎம்பி லேன் பகுதியின் குடியிருப்புகளில் சேரக்கூடிய குப்பை கூளங்களை அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ட்ரை சைக்கிள் மூலம் அள்ளிவந்து சிஎம்பி வாய்க்கால் பள்ளத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். குமிந்து காணப்படும் குப்பைகளை டிராக்டர் வாகனம் மூலம் அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சிஎம்பி லேன் வாய்க்கால் பகுதி புதிய குப்பை கிடங்காக மாறியுள்ளது. இதனால் துர் நாற்றமும் வீசுகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.