.

Pages

Saturday, July 18, 2015

அதிரையில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம் !

 
அதிரை காங்கிராசார் சார்பில் காமராஜர் 113 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எஸ்.எம் முஹம்மது மொய்தீன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.விகேஎஸ் இளங்கோவன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் வேண்டுகோள் படி எதிர்வரும் 23-07-2015 அன்று திருச்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள இருக்கும் கூட்டத்தில் அதிரை நகர காங்கிரசார் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் முன்னாள் தலைவர் ஏ கோவிந்தன்,  நாராயண சாமி, ஏ. பாஃருக், கே.பி தாவூது பாட்சா, பி.திலகராஜ், கட்டபொம்மன், சிராஜுதீன், எஸ்.பி அப்துல் ரெஜாக், சி.சார்லஸ், வி.கே வீரசிங்கம், மின்னார், ராஃபியுதீன், என்ஏ நெய்னா முஹம்மது, அயூப்கான், ராஷித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. ஜோதிடர்கள் வாசனுக்கு குரு பெயர்ச்சியால் அரசியலில் சாதகம் நிலவுவதாக சொன்னார்கள் அதற்க்கு மாறாக த.மா.கா.,வில் இருந்து, மாவட்ட தலைவர், இளைஞர் அணி நிர்வாகி, மாநில நிர்வாகி, பேச்சாளர் என, வரிசையாக, காங்கிரசுக்கு இடப் பெயர்ச்சி செய்ய முயன்று வருவதால், வாசன் கலக்கம்அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருச்சி மாநாட்டில் தங்களுடைய பலத்தை ( அதிரை காங்கிரஸ் ) நிருபித்து; தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி வழங்க சந்தர்ப்பமாக வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.