.

Pages

Saturday, July 18, 2015

தேங்காய் திருடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்: களத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் !

அதிரை சிஎம்பி லேன் கல்லுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பைசல் அஹமது ( வயது 31 ). விவசாயியான இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பேராவூரணி நெல்லக்காட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள தென்னை மரங்களில் உள்ள 150 க்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெட்டி திருடிச்சென்ற தகவல் பைசல் அஹ்மதுக்கு கிடைத்தது. அதிர்ச்சியடைந்தவர் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்கள். இதன் பின்னர் பேராவூரணி காவல்நிலையம் சென்று தேங்காய்களை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக பேராவூரணி இன்ஸ்பெக்டர் அன்பழகன் தேங்காய் திருடியதாக கூறப்படும் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.