.

Pages

Wednesday, July 22, 2015

அதிரையில் மீண்டும் கலர் பேப்பர் லட்டு விநியோகம் !

அதிரையில் கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை நடைபெற்ற திருமண வைபவங்களில் கலந்துகொள்ளும் உற்றார்-உறவினர்கள்-நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு வரும் கலர் பேப்பர் லட்டு மிகவும் பிரபல்யம். அதிரையர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தது.

இந்த லட்டுகளை தயாரிப்பதற்கென்று திருமணம் நடைபெற இருக்கும் 15, 20 நாட்களுக்கு முன்னதாகவே ஊரில் இருக்கும் லட்டு தயாரிக்கும் மேஸ்திரிகளை வீடுகளுக்கு வரவழைத்து சொந்தமாக லட்டு தயாரிப்பார்கள். இதன்பின்னர் லட்டுகளை கலர் பேப்பரில் மடித்து ( சஹனில் ) மரவையில் அடுக்கி பாதுகாப்பார்கள். இதன் சுவையும், நறுமணமும் சுற்றுவட்டார பகுதியின் வீடுகள் வரை காற்றில் பறந்துசெல்லும். நாளடைவில் திருமண வைபவங்களில் விநியோகித்து வந்த லட்டுகள் குறைந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதிரையில் இன்று காலை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் லட்டு விநியோகிக்கப்பட்டது. பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் விதவித கலர் பேப்பரில் மடிக்கப்பட்டிருந்தன. நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்டு விநியோகம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.