.

Pages

Sunday, July 19, 2015

பொரிச்ச கோழியை அதிகம் சாப்பிட்டதால் வாலிபருக்கு ஏற்பட்ட விபரிதம் !

கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன வாலிபருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் டாக்டரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட உணவில் ஒரு அயிட்டமாக சாப்பிட்டுவந்த கோழி வருவலால் ஏற்பட்டது என டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

ஆண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டோஸ் டெரோன் இடையில் ஏற்படும் சமநிலையின்மையால் அவரது மார்பகங்கள் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வருவதை அறிந்த டாக்டர்கள், இப்படி ஹார்மோன் வளர்ச்சியை அபரிமிதமாக தூண்டிவிடும் கோழி வறுவலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை அதிகமாக சாப்பிடுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைப்போன்ற அபரிதமான மார்பக வளர்ச்சியால் ஆண்-பெண் இரு பாலினத்தவருக்கும் புற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.