.

Pages

Friday, October 2, 2015

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும்.

2010-ம் ஆண்டு செப்டம்பர் - 30ம் தேதி அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150-ம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தாழத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.  விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.50000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ375-ம், பட்டப்படிப்பு தோச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.450-ம், உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.  பதிவுசெய்து 2015-ம் ஆண்டு செப்டம்பர்  30-ந்தேதி அன்று ஒராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.  இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு கிடையாது.

உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது.  ஆயினும் தொலைதூரக்கல்வி (DISTANCE EDUCATION) பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது.  முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெறுபவராக இருந்தால் விண்ணப்பிக்க தேவையில்லை.

தகுதி  உடைய பதிவுதாரர்கள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளவும். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்ப  படிவத்தினை 27.11.2015-க்குள் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணிமுதல் அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TRANSFER CERTIFICATE )  மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பம் செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.