கிரசன்ட் இரத்த கொடையாளர்கள் [ CBD ]அமைப்பின் சார்பில் இரத்த தானத்தை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இதில் இரத்தம் தானம் - மரம் வளர்ப்பு - கருவேல மரங்கள் அழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணி சென்றது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் 40 கிலோ மீட்டர் தொலை தூரம் வரை சென்ற பேரணியில் 120 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
முன்னதாக பேரணி துவக்க விழா நிகழ்ச்சி வண்டலூர் கிரசன்ட் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக 'கனக்ட் ப்ளட் டோனர்ஸ்' பொறுப்பாளர் சுப்பிரமணியன், 'நோபல் ப்ளட் டோனர்' பொறுப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பேரணியை துவக்கி வைத்தார்கள்.
கிரசன்ட் இரத்த கொடையாளர்கள் அமைப்பின் மாநில தலைவர் குர்ஷீத் ஹுசைன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிபிடி பொறுப்பாளர்கள் மாணவி ஆஷிகா தமிழிலும், மாணவர் ஷஹீன் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்கள். துவக்க விழா முடிவில் சிபிடி உறுப்பினர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிபிடி தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹமது உட்பட ஏராளமான தன்னார்வலர்கள் - இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை சிபிடி சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.