அதிரை வளர்ந்து வரும் பகுதி என்றும், இங்கு பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும், குறிப்பாக பிலால் நகர் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமா ? என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் சம்பந்தபட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு குறைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
இந்த நிலையில், அதிரையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில், 110 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ கூறுகையில், 'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னழுத்த ஏற்ற தாழ்வுகளை குறைக்கும் வகையிலும், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் அதிரையில் 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் பணிகளை விரைவில் துவங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது' என்றார்.
Thanks for God and others
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசகோதரர் என்.ரெங்கராஜன் அவர்களுக்கு நன்றி .நன்றியுடன் உங்கள் அதிரை மக்கள்.
அதிரையில் எங்கள் நிலத்தில் இயங்கி வரும் அதிரை மின் வாரியம்,
அதிரையில் அனைவர்க்கும் இலவச மின்சாரம் கிடைத்தால் மின்வாரியத்தை எங்கள் அதிரை மக்களை கொண்டு இயக்கி கொள்வோம்.அப்படி ஒரு (solution) இருந்தால் அதை எங்களுக்கு அமைத்து கொடுங்கள்.
நாதியற்று கிடக்கும் எங்கள் அதிரை மின்வாரியம்.
கேப்போர்க்கு பதில் சொல்ல ஆள் இல்லாத எங்கள் அதிரை மின்வாரியம்
எங்கள் (அதிரைமாநகரத்தில்) உள்ள மின் வாரியத்தில். (இரண்டு லயன்மேன் )
(இரண்டு போர்மேன்) ஒன்றுக்குமே உருப்படாத (A E ) என்ற அதிகாரி வேதனை.
சகோதரர் என் ரெங்கராஜன் அவர்களுக்கு .எங்களின் வேண்டுகோள்.
இருந்தும் இல்லாத (A E ) என்ற அதிகாரியை எங்க ஊர் மின்வாரியத்தை விட்டு மாற்றி தந்தும்.
பற்றாக்குறையாக இருக்கும் லயன்மேன்களை அதிகபடியாக்கி தருமாறும்
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்றும்
(JE) என்ற அதிகாரி இல்லாமல் இயங்கி வரும் எங்கள் (அதிரைமாநகரத்தில்) உள்ள
எங்கள் தொலைபேசி அலுவலகத்தில் முழுநேர அதிகாரியை உருவாக்கி தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
இப்படிக்கு உங்கள்
சகோதரன் எஸ் .குலாம் முகமது.