.

Pages

Tuesday, December 22, 2015

வங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

மிலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2-வது சனிக்கிழமை ஆகியவற்றை முன்னிட்டு வங்கிகளுக்கு டிசம்பர் 24 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபி பண்டிகை டிசம்பர் 24-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், அதற்கடுத்த நாள் 2-வது சனிக்கிழை என்பதாலும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஏடிஎம் மையங்களில் போதிய பணத்தை இருப்பு வைக்க வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால், ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது.

1 comment:

  1. இவ்வாறு தொடர் விடுமுறை வரும்போது இடைப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை அதற்கு முந்திய வார சனிக்கிழமை விடுமுறையாகக் கொடுத்து தொடர் விடுமுறையைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.