அதிராம்பட்டினம், டிசம்பர் 26
'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளை தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட துவக்க விழா நிகழ்ச்சி அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தனது தலைமை உரையில், ''கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பின் மூலம் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை' என்றார்.
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த ''கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் குர்ஷீத் ஹுசைன் அறிமுக உரை மற்றும் சிபிடி ஆற்றி வரும் இரத்ததான சேவை மற்றும் சென்னை வெள்ள பாதிப்பின் போது ஆற்றிய சேவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிபிடி ஆற்றிய சேவைகள் அனைத்தும் பவர் பாயின்ட் ஒளித்திரை மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சை மீனாட்சி மருத்துவமனை நிர்வாக அலுவலர் எம். ஜேம்ஸ், பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் இரத்த தானம் குறித்து பேசினார்கள்.
இதையடுத்து இரத்த தானம் செய்த குருதிக்கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் 29 தடவை இரத்தம் வழங்கி மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற நிருபர் சாகுல் ஹமீது, அதிரை மைதீன், இப்ராஹீம் அலி, முஹம்மது ஆரீப், இஸ்மாயில், அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மேலும் சென்னை வெள்ள பாதிப்பின் போது சிறப்பாக சேவை பணியாற்றிய கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் சென்னை பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட செயலாளர் காலித் அஹமது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.
முன்னதாக கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பின் அதிரை நகர பொறுப்பாளர் நூர் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் தஞ்சை மாவட்ட நிர்வாகி முஹம்மது சாலிஹ் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக அதிரை நகர செயலாளர் இராம குணசேகரன், மனிதஉரிமை கழக பொறுப்பாளர் ஓகேஎம் சிபஹதுல்ல்லாஹ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், லயன்ஸ் சங்கத்தலைவர் ஆறுமுகச்சாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் சாரா அஹமது, சாகுல்ஹமீது, தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை மைதீன், இந்திய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன், அதிரை ராஜா, மணிச்சுடர் நிருபர் சாகுல்ஹமீது, பத்திரிகையாளர்கள், இணையதள நிருபர்கள் மற்றும் கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.