.

Pages

Monday, December 21, 2015

அமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி!

அமீரகத்தில் (யுஏஇ) கார்டன் சிட்டி என்றழைக்கப்படும் பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரை சுற்றிலும் மரங்களும் செடிகளும் அதிகம் காணப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் உள்ளன. விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறையும் இங்கு உள்ளது. பல வகையான‌ காய்கறிகளும் இங்கு விளைவிக்க படுகின்றன. கோழி பண்ணை, பால் பண்ணைகள் இங்கு உள்ளது.

இதில் குறிப்பிடதக்க வகையில் விளங்குவது ஜெபல் ஹபீட் (jebel hfeet) என்ற மலை பகுதியாகும். இதன் உயரம் சுமார் 4098 அடியாகும் மலையில் 11.7 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மூன்று வழி சாலையுடன் 60  வளைவுகளுடன் திகழ்கிறது. உலகின் தலை சிறந்த மலை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும். 1000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை  நிறுத்துவதற்கு மலைபகுதியில் ஏற்பாடு செய்துள்ளார்கள். மலையின் உச்சியில் நட்சத்திர ஹோட்டல் அமக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சியில் நின்றுக் கொண்டு பசுமையாக காட்சியளிக்கும் அல் அய்ன் நகரத்தையும் ஓமான் நாட்டு எல்லைகளையும் காணலாம்.

மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ‘GREEN MUBAZZARAH’ எனும் புல்வெளி பூங்கா.  இந்த பூங்கா இரவில் ரசிப்பதற்கேற்ற வகையில்,வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு பரந்த வெளியிலும் பாறைகள் மேலும் புற்களை நட்டு வளர்த்துள்ளனர். இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு இயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களும் உள்ளது. உலகம் முழுவதுமிருந்து இயற்கை ஆர்வலர்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

Image credits: shafeer ahamed, kilakkarai
நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.