.

Pages

Wednesday, December 16, 2015

சிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது !

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் வண்டிப்பேட்டை முதல் சிஎம்பி லேன்- மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரையில் பெய்து வந்த தொடர் மழையால் சாலை மிகவும் மோசமடைந்து காட்சியளித்தது.

இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம், கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், ஜமாத்தார்கள், இந்த பகுதியின் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் முனைவர் என் சுப்பையன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் உள்ளிட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிதி ரூ 9.90 லட்சம் மதிப்பீட்டில் வண்டிப்பேட்டை சிஎம்பி லேன் சாலை முதல் காட்டுக்குளம் வரையிலான 1 கிலோ மீட்டர் நீளத்தில், 12 அடி அகலம் கொண்ட, சிங்கிள் லேயரில் தார் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. ஜேசிபி வாகனத்தை கொண்டு பழுதடைந்த சாலையை பெயர்த்து எடுக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது. பணிகளை இப்பகுதியின் பேரூராட்சி கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் மேற்பார்வையிட்டார்.

இதுகுறித்து கவுன்சிலர் முஹம்மது இப்ராஹிம் நம்மிடம் கூறுகையில்...
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பழுதடைந்துள்ள சிஎம்பி லேன் சாலையை சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் முனைவர் சுப்பையன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ உள்ளிட்ட சம்பந்தபட்ட துறை அலுவலரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தேன். என்னைப்போல் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் உள்ளிட்ட இந்த பகுதியின் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்தனர். பல்வேறு தரப்பினரின் தொடர் கோரிக்கை அடுத்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிதி ரூ 9.90 லட்சம் மதிப்பீட்டில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் சிஎம்பி லேன் சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் இந்த பணி நிறைவுற்றதும் அதிரை பேரூராட்சி பொதுநிதி ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் சிஎம்பி லேன் பகுதியில் 300 மீட்டர் நீளத்தில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் பேரூராட்சி பொது நிதி ரூ 3.75 லட்சம் மதிப்பீட்டில் வி.கே.எம் ஸ்டோர் முதல் புதுமனைத்தெரு சாலை இணைப்பு வரையிலான 100 மீட்டர் நீளத்தில் 4 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

எங்கள் பகுதியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த சாலையில் வீடு கட்டியுள்ளோர் அவ்வளவு தூசிகளை கடந்த காலங்களில் நுகர்ந்துல்லார்கள், இதன் வழியிலே சென்ற வாகன ஓட்டிகள் பட்ட துயரமும் கொஞ்சமல்ல. இந்த சாலை மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்கள் அனைவருக்கும் பொது மக்களின் துஆ நிச்சயம் கிடைக்கும்.

    படிப்படியாக இதர சாலைகளையும் சரி பண்ணிவிட்டால் நல்லது. அந்தந்த வார்டு மெம்பர்கள் சேர்மனுடன் இணைந்து முயற்சி செய்வது அவசியம்.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்..
    சித்திக் பள்ளி அருகில் இருக்கும் கடை, ஹோட்டல் மற்றும் ரேசன் ஸ்டோர்ஆக்கிரமிப்பையும் அகற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏன் என்றால் அதே இடத்தில் ஆட்டோ நிறுத்தமும் இருப்பதால் அந்த இடம் மட்டும் குறிகியதா காட்சி தருகிறது.

    ReplyDelete
  4. வாழ்க!
    சேர்மன் அஸ்லம் வாழ்க!!
    மெம்பர் இபுறாஹீம் வாழ்க!!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.