.

Pages

Tuesday, December 15, 2015

புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் கின்னஸ் சாதனை !

சவுதி அரேபியாவின் இளம்பெண்கள் ஒன்றிணைந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் பொருட்டு கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் ரியாத் மாநகரில் அமைந்துள்ள நவுரா பல்கலைக்கழகத்தின் உதைப்பந்து அரங்கில் குவிந்தனர். அங்கு இளஞ்சிவப்பு நிறத்தினாலான சால்வையை தலையில் அணிந்துகொண்டு ரிப்பன் வடிவில் அமர்ந்தனர்.

இந்த சாதனை நிகழ்வில் ஒட்டுமொத்தமாக 8,264 சவுதி அரேபிய இளம்பெண்கள் பங்கேற்றுள்ளதாக உலக கின்னஸ் சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

தூய்மையான ஆரோக்கியமே வருங்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என இந்த நிகழ்விற்கு ஊக்கமளித்து ஆதரவும் தெரிவித்த இளவரசி ரீமா பிந்த் பந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 6,847 பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ரிப்பன் வடிவமே இதுவரை முறியடிக்கப்படாத கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை சவுதி இளம்பெண்கள் ஒன்றிணைந்து முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.