பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் வண்டிப்பேட்டை முதல் சிஎம்பி லேன்- மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரையில் பெய்து வந்த தொடர் மழையால் சாலை மிகவும் மோசமடைந்து காட்சியளித்தது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிதி ரூ 9.90 லட்சம் மதிப்பீட்டில் வண்டிப்பேட்டை சிஎம்பி லேன் சாலை முதல் காட்டுக்குளம் வரையிலான 1 கிலோ மீட்டர் நீளத்தில், 12 அடி அகலம் கொண்ட, சிங்கிள் லேயரில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிஎம்பி லேன் பகுதியில் மேற்கொண்டு வரும் சாலை பணியின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் பகுதி பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறுவதில் மகிழ்ச்சி ஒருபக்கம் நீடித்தாலும், வண்டிப்பேட்டை முதல் சிஎம்பி லேன்- மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை என்ற தரத்தில் இருக்கும் இந்த பகுதியில் சிங்கிள் லேயர் தார் சாலை அமைப்பதால் தரமானதாக இருக்காது. அதிகமான மக்கள் நடமாட்டமும், அதிக வாகனங்களும் புழங்கும் இந்த பகுதியில் அடுத்தடுத்து பொழிய இருக்கும் மழைகளில் தார் சாலை பெயர்த்துக்கொண்டு காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இந்த பணிக்காக செலவிடப்படும் தொகை மக்களுக்கு பயன் அளிக்காமல் வீணாகிவிடும். மேலும் இந்த சாலை பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. இந்த நிதியைக்கொண்டு 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைப்பது சாத்தியமா ? என்பது தெரியவில்லை. ஆதலால் கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்து, இந்த சாலையை டபுள் லேயரில் தரமான தார் சாலையை அமைத்து தர, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அதிரைவாழ் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் சம்பந்தபட்டோரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.