நெல்லை மாவட்டம் களக்காடு 4–வது தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் காஜாமைதீன் (வயது25). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண்ணை ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு ஏர்வாடி அருகே உள்ள காந்தி நகருக்கு சென்றார். காட்டுப்பகுதியில் சென்ற போது ஆட்டோவை வழிமறித்த கும்பல் காஜாமைதீனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்று காஜாமைதீனின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஏர்வாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றும் அங்கும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நெல்லை, நாங்குநேரி, களக்காடு, வள்ளியூரில் இருந்து ஏர்வாடிக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் ஏர்வாடியில் குவிக்கப்பட்டனர். மேலும் நெல்லை நகரில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டார்கள்.
கொலை சம்பவத்தை கண்டித்து காஜாமைதீனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தும், கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியும் ஏர்வாடி மெயின்ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது.
காஜாமைதீன் கொலை குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் சந்தேகத்தின் பேரில் களக்காடு அருகே உள்ள பொத்தையடியை சேர்ந்த மணிகண்டன், சுப்பையா என்பவரது மகன்கள் சரவணன், ரதீஷ், ஏர்வாடியை சேர்ந்த ஒரு இளம்பெண் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். ஆனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கொலை குறித்து 3 கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஜாமைதீன் முன்பு வள்ளியூரில் உள்ள பேக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வேலையை விட்டு விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஏர்வாடியில் ஆட்டோ ஓட்ட வந்துள்ளார். ஏர்வாடி ஆட்டோ ஸ்டாண்டில் இரு தரப்பினருக்கிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த பிரச்சினையில் காஜா மைதீன் ஒதுங்கியே இருந்துள்ளார். யாருடனும் அவருக்கு முன்விரோதம் இல்லை என கூறப்படுகிறது. எனினும் ஏர்வாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஒரு சிலரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஜாமைதீன் ஏற்கனவே வள்ளியூரில் வேலை செய்யும் போது யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அதன் பின்னணியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே போல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு களக்காடு அருகே உள்ள பொத்தையடியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரும், ஆட்டோ டிரைவருமான முத்துக்குமார் என்பவரை 4 பேர் கும்பல் வெட்டி கொல்ல முயன்றது. இதற்கு பழிக்கு பழியாக காஜா மைதீன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3–வது நாளாக ஏர்வாடியில் இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் 2–வது நாளாக அடைக்கப்பட்டுள்ளன. இதே போல் 2–வது நாளாக ஏர்வாடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
கொலையாளிகளை கைது செய்யும் வரை காஜா மைதீன் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் காஜாமைதீன் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தை கண்டித்து நாளை ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அறிவித்துள்ளனர்.
நன்றி:மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.