தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முழு சுகாதார தமிழகமாக்குதலின் கீழ் திறந்தவெளி கழிப்பிடமற்ற மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சுழலுடன் கூடிய வகையில் தூய்மையான, பசுமையான, சுகாதாரமான தஞ்சை மாற்றுவதற்கான மாவட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்த வெளிக் கழிப்பிடமற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதன் நடவடிக்கையாக 9.01.2016 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் குக்கிராமங்கள் முதல் பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி என அனைத்து பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து உறுதிமொழி ஏற்க அனைத்து வித ஏற்பாடுகளையும் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
முதற் கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அலுவலர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு நல்ல முறையில் இருப்பதனை அனைத்து தலைமை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ. சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.என்.சீனிவாசன், பெரியார் மணியம்மை துணை வேந்தர் திரு. நல். இராமச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.