.

Pages

Monday, December 21, 2015

காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதனால் அதிரையில் உள்ள சில குளங்களுக்கு மழை நீர் வரத்தொடங்கியது. இதில் அதிரை பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளம் சிறிதளவு மழை நீருடன் காணப்பட்டது.

இந்நிலையில் சிஎம்பி வாய்க்கால் வழியாக ஆற்று நீர் இன்று அதிகாலை முதல் வந்துகொண்டிருக்கிறது. ஆற்று நீர் தங்கு தடையின்றி தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் இன்று இரவுக்குள் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சிஎம்பி வாய்க்கால் இணைப்பின் அருகாமையில் உள்ள மரைக்கா குளத்தை நிரப்பும் முயற்சியில் அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் ஈடுபட வேண்டும் எனவும், சிஎம்பி இணைப்பிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை சரிசெய்து குளத்திற்கு ஆற்று நீரை கொண்டுவரும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் ஆற்று நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.

அதிரை நியூஸ் வாசகர் ராஜிக் முஹம்மது எடுத்தனுப்பிய கட்டுக்குளம் ஆற்று நீர் வருகை காட்சி 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.