.

Pages

Tuesday, December 22, 2015

பட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்!

அருகே அரசு பேருந்து திங்கள்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து நம்பிவயல் அருகே சென்றபோது நம்பிவயல் காட்டாற்று பாலம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த 8 பெண்கள், 7 ஆண்கள் என 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அருகில் இருந்த நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பப்பட்டனர். பேருந்த கவிழ்ந்தவுடன் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவோணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.