தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி, முழு சுகாதார தமிழகம் என்ற இலக்கை நோக்கி, தஞ்சாவூர் மாவட்டத்தினை முழு சுகாதார மாவட்டமாக திறந்த வெளிக் கழிப்பிடமற்ற மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலுடன் கூடிய வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்ததாவது:
09.01.2016 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து சுகாதார உறுதிமொழி ஏற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வாழும் 16.00 இலட்சம் மக்களும், நகர்ப்புற பகுதிகளில் வாழும் 7.00 இலட்சம் மக்களும் இவ்வுறுதிமொழி ஏற்கவுள்ளார்கள். அதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளான 2028 பள்ளிகளிலும் அதே நாள் அதே நேரத்தில் உறுதிமொழி எடுக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக் குழுக்களையும், ஒருங்கிணைத்து அவர்களின் பங்கேற்புடன் அனைத்து இல்லங்களிலிருந்து சுகாதார உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் விடுபடாமல் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
09.01.2016 அன்று மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார உறுதிமொழி ஊரகப் பகுதிகளில் குக்கிராம அளவில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் தேர்வ செய்யப்பட்டு அவ்விடங்களில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது. அதே போல், நகர்ப்புற பகுதிகளில் வார்டு அளவில் மக்களை ஒருங்கிணைத்து சுகாதார உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
திறந்தவெளியில் மலம் கழிப்பது தவறான செயல் என்பதனையும்,, சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் பராமரிப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல் குறித்தும் மற்றும் பசுமையான தஞ்சை உருவாக்கும் நோக்கில் அதிக அளவிலான மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது குறித்தும் சுகாதார உறுதிமொழி அனைத்து மக்களாலும் ஏற்கப்படவுள்ளது.
சுகாதார உறுதிமொழி ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் அனைத்து இடங்களிலும் ஒரே நாள் ஓரே நேரத்தில் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியினை செயலாக்கிடவும், கண்காணித்திடவும் மாவட்ட அளவில் முதன்மை கண்காணிப்பு அலுவலர்களை இணை, துணை இயக்குநர் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு குக்கிராமம்ஃவார்டு அளவில் நடைபெறும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு அரசு அலுவலர்கள் ஏறத்தாழ 3200 நபர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.
சுகாதார உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினால் மக்கள் மனதில் சுகாதாரம் குறித்த ஒரு தூண்டுதலினை ஏற்படுத்திட முடியும். இத்தூண்டுதலினை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பொழுது தஞ்சாவூர் மாவட்டத்தினை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாகவும், தூய்மையான சுற்றுப்புறச்சூழல் கொண்டதாகவும், பசுமையான மாவட்டமாகவும், உருவாக்க முடியும் என்ற அடிப்படையில இம்முயற்சி மேறகொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.