.

Pages

Monday, December 21, 2015

நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவராக கவுன்சிலர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரீப் தேர்வு !

நடுத்தெரு - வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கல்விக்குழு கூட்டம் இன்று பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, பள்ளி தலைமை ஆசிரியை மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமீபத்தில் மறைந்த பள்ளியின் கல்விக்குழு தலைவர் ஹெச். அப்துல் காதர் அவர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் பள்ளி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இதையடுத்து கூட்டத்தில் பள்ளியின் புதிய கல்விக்குழு தலைவராக அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு கவுன்சிலர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரீப் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய கல்விக்குழு தலைவர் கவுன்சிலர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரீபுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் பள்ளியின் கல்விக்குழு பொறுப்பாளர்கள் அப்துல் மாலிக், 'கவுன்சிலர்' முஹம்மது இப்ராஹீம், 'நிருபர்' சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் ஜமால் முஹம்மது, பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' சாகுல் ஹமீது, அதிரை

5 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.