.

Pages

Wednesday, December 16, 2015

சவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப்பிய இந்தியன் சோஷியல் ஃபோரம்!

மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த சக தமிழர்களான அண்ணாமலை முருகேசன். செந்தில் கண்ணன். ஆறுமுகம் முருகேசன்.சின்ன கருப்பசாமி. சுரேந்திரன் முத்துக்குமார். செந்தில் கண்ணப்பன். பெருமாள். ஜெயபாரதி ஆகியோர் சவூதி அரேபியா ரியாதில் உள்ள ஷிபா என்னுமிடத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வந்துள்ளார்கள்.

அந்த கம்பெனியில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்கள்
பின்பு கம்பெனியில் வேலையில்லை எனக்கூறி அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் பல்வேறு உதவிகளை முகநூல் வழியாக அறிந்து அதன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவியை நாடினார்கள்.

அவர்களை இந்தியன் சோஷியல் போரம், ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் துணைத்தலைவர் முஹம்மதலி பாபு, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அனீஸ் முஹம்மது மற்றும் துணைத் தலைவர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் தங்க வைத்து அவர்கள் நாடு திரும்பும் அனைத்து முற்சிகளையும் செய்து வந்தனர்.

இறைவன் உதவியால் இந்தியன் சோஷியல் ஃபோரம். ரியாத் -தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் துணைத்தலைவர் முகம்மதலி பாபு, செயலாளர் சர்தார் என்கிற சாகுல் ஹமீது ஆகியோரின் துரிதமான நடவடிக்கைகளால் சவூதி அரசின் சட்டங்களுக்கேற்ப விரைந்து செயல்பட்டு அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள்.

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனித நேய பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதற்கு பெரிதும் உதவி வரும் ஊடகங்களுக்கும் இணையதள ஆசிரியர்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.