இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்த பணிக்காக கடந்த சில வாரங்களாக அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தீவிர அழைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செக்கடி பள்ளியில் நடைபெற உள்ள தனது இல்லத் திருமண நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தும்படி அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.
நண்பர் அஸ்லம் அவர்களுக்கு தங்கள் வீட்டு திருமணம் சிறப்பாய் நடைபெற அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக
ReplyDeleteبارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.
வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து.
S.O.S.தாஜுதீன்