.

Pages

Wednesday, December 16, 2015

அமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ரூ 3.06 லட்சம் வெள்ள நிவாரண நிதி மண்டல பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு !

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, இதன் புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகமெங்கும் வெள்ளம் நிவாரணத்திற்காக நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அமீரக TNTJ அதிரை கிளை சார்பில் அமீரகத்தில் உள்ள அதிரையர்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி நடந்தது. இதில் மொத்தம் அமீரக நாணயம் 7,025 திர்ஹம்ஸ் திரட்டப்பட்டது. இவை இந்திய நாணயத்தில் சுமார் ரூ 1.27 லட்சம் ஆகும். இந்த நிதியை கடந்த [05-12-2015 ] அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் மண்டல பொறுப்பாளர் சாஜிதுர் ரஹ்மான் அவர்களிடம் அமீரக அதிரை TNTJ கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அமீரகத்தில் இரண்டாம் கட்டமாக திரட்டிய அமீரக நாணயம் 9840 திர்ஹம்ஸ் மற்றும் அமெரிக்க நாணயம் 10 டாலர் பெறப்பட்டது. இவை இந்திய நாணயத்தில் சுமார் ரூ 1.79 லட்சம் ஆகும். இவற்றை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் மண்டல பொறுப்பாளர் சாஜிதுர் ரஹ்மான் அவர்களிடம் அமீரக அதிரை TNTJ கிளை நிர்வாகி ஒப்படைத்தார். இதுவரையில் அமீரக அதிரை TNTJ கிளை சார்பில் அமீரகத்தில் சுமார் ரூ 3.06 லட்சம் திரட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியை திரட்டிய TNTJ அதிரை கிளை நிர்வாகிகளுக்கும், நிதியை வாரி வழங்கி உதவிய அனைத்து அதிரையர்களுக்கும் துபாய் மண்டல பொறுப்பாளர் சாஜிதுர் ரஹ்மான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.