கடும் மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் சாலைகளை சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் முனைவர் என் சுப்பையன் அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அனுப்பினார்.
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
'கடும் மழை காரணமாக அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மெயின் சாலை, தம்பிக்கோட்டை சாலை, துவரங்குறிச்சி சாலை,நாட்டுச்சாலை வரை உள்ள சாலை, பரக்கலக்கோட்டையிலிருந்து கல்யாண ஓடை வரையிலான சாலை, பட்டுக்கோட்டை பாளையம் பகுதி சாலை ஆகியவற்றை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லையில் ஏரிபுறக்கரை ஊராட்சியின் ஒரு பகுதியான 'பிலால் நகர்' என்ற பகுதியில் கடும் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமாக உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதி மக்கள் நிர்வாக எல்லை பகுதி தெரியாமல் ஒரே தெருவில் ஒருவர் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கும், மற்றொருவர் அதிரை பேரூராட்சிக்கும் வரியை செலுத்தி வருகின்றனர். இதனால் முறையான தூய்மைபணிகள் இந்த பகுதியில் நடைபெறவில்லை. எனவே வருவாய்துறை மூலம் இப்பகுதி எல்லைகளை வரையறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும்' என இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.