கூட்டத்தில் மறைந்த அதிரை பேரூர் திமுக முன்னாள் அவைத்தலைவர் எல்.வி.எஸ் பாட்சா முகைதீன் மரைக்காயர், மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் இராமச்சந்திரன், அதிரை பேரூர் திமுக அவைத்தலைவர் ஹெச். அப்துல் காதர் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. இவற்றை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.எம்.ஏ முஹம்மது பாருக் திறந்து வைத்தார்.
இதையடுத்து சமீபத்தில் மறைந்த அதிரை பேரூர் திமுக அவைத்தலைவர் ஹெச் அப்துல் காதர், அதிரை பேரூர் 16 வது வார்டு செயலாளர் முஹம்மது யூசுப், அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் மற்றும் காளிமுத்து ஆகியோருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து காலியாக உள்ள அதிரை பேரூர் அவைத்தலைவர் பொறுப்பை நிரப்பும் விதமாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஆலோசனை கோரப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை வகித்த டி. சபீர் அதிரை பேரூர் புதிய அவைத்தலைவராக கடற்கரைதெருவை சேர்ந்த ஜே. சாகுல் ஹமீது அவர்களை விருப்பம் தெரிவித்து முன்மொழிந்தார். இவற்றை அதிரை பேரூர் துணை செயலாளர் தில்லை நாதன் வழிமொழிந்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது அறிவிக்கப்பட்டார். மேலும் காலியாக உள்ள 13 வது வார்டு செயலாளராக எல்.எம்.எஸ் சைஃபுதீன், 16 வது வார்டு செயலாளராக என்.ஏ முஹம்மது யூசுப் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் துணை செயலளார் அன்சர்கான் நன்றி கூறினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாவன்னா தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteமாஷாஅல்லாஹ் வாழ்த்துகள் இத்ரீஸ் காகா உங்கள் மற்றும் இதர சகோதரர்களுக்கும் நான் துவா செய்கிறேன் தி மு க ஒன்றிய கழத்திற்க்கும் அதிரை நியூஸ்க்கும் நன்றி
ReplyDeleteமாஷாஅல்லாஹ் வாழ்த்துகள் இத்ரீஸ் காகா உங்கள் மற்றும் இதர சகோதரர்களுக்கும் நான் துவா செய்கிறேன் தி மு க ஒன்றிய கழத்திற்க்கும் அதிரை நியூஸ்க்கும் நன்றி
ReplyDeleteமாஷாஅல்லாஹ் வாழ்த்துகள் இத்ரீஸ் காகா உங்கள் மற்றும் இதர சகோதரர்களுக்கும் நான் துவா செய்கிறேன் தி மு க ஒன்றிய கழத்திற்க்கும் அதிரை நியூஸ்க்கும் நன்றி
ReplyDeleteமன்னிக்கவும் இரண்டு முறை பதிவு ஆகிவிட்டது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete