.

Pages

Friday, December 25, 2015

அதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாளை முதல் மீண்டும் துவக்கம் !

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத அதிரை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, புகைப்படம் எடுக்கும் பணி கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி டாக்டர் ஹனீப் மருத்துவமனை அருகே அமைந்துள்ள அதிரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் பழனிவேல் நம்மிடம் கூறுகையில்...
'ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாளை [ 26-12-2015 ] முதல் எதிர்வரும் ஜனவரி 6 ந் தேதி வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் 70 டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளோம். ஆதார் அட்டைக்காக இதுவரையில் புகைப்படம் எடுக்காத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.