.

Pages

Wednesday, December 23, 2015

பல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு !

தினமும் பல்லாயிரக்கணக்காண பயணிகளும் பல நூற்றுக்கணக்காண பள்ளிக்குழந்தைகளும் பயணிக்கும் அதிரை to பட்டுக்கோட்டை ரோடு குண்டும் குழியுமாக... கிட்டத்தட்ட காணாமல் போயே பல நாட்களாகியும் மீட்டுத்தருவார் யாருமின்றி பரிதவித்துக் கொண்டுள்ளது.

சமீபத்திய மழையால் ரோடு சேதமாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் மழைக்கு முன்பிருந்தே ரோடு மிக மோசமான நிலையில் தான் இருந்தது என்றும் இப்போது அது படுமோசமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நித்தமும் இந்த ரோட்டில் குட்டிக்கரணமடித்து சென்று வரும் ஓட்டுனர்கள் புலம்புகிறார்கள்.

ஒருவேளை சென்னை அல்லது கடலூரில் பெய்தது போல் மழை பெய்திருந்தால் சாலை பள்ளங்களில் படகு சர்வீஸ் நடத்த மட்டுமே இந்த சாலை லாயக்காகியிருக்கும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. NR. ரெங்கராஜன் அவர்கள் சாலையை செப்பனிட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ள செய்தி அதிரை நியூஸ் இணையதளம் மற்றும் இன்றைய [23.12.2015] தினத்தந்தி, தினமணி, தினமலர் நாளிதழில்களில் வெளிவந்துள்ளது.

SH 29 தஞ்சை சாலையை கிழக்கு கடற்கரை சாலை[ECR]யுடன் இணைக்கும் இந்த பிரதான சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செப்பனிட்டுத் தருவதுடன் விரைவில் முற்றிலும் தரமான முறையில் புதிப்பித்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

சாம்பிளுக்கு சில படங்கள்....

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.