பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல். மற்றும் யுனிநார் டெலிபோன் நிறுவனங்கள் டெலிபோன் டவர் ஒன்றை அமைத்திருந்தனர். தற்போது அது செயல்பாட்டில் இல்லை. அந்த டவரில் இன்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொருப்பாளர் பாப்பாநாட்டை சேர்ந்த விவசாயி அப்பாக்கண்ணு(36) என்பவர் ஏறி மத்திய அரசு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டினை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தார். அவருக்கு ஆதரவாக அதே கட்சியை சேர்ந்த காசிநாதன், கணேசன் மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் கீழே நின்றபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.