.

Pages

Tuesday, December 22, 2015

வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி அரங்கில் வேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
அரசுக் கல்லூரியில் மாணவியர்களுக்காக இப்பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. போட்டி நிறைந்த உலகில் நீங்கள் உயர் பதவிக்கு வர இலக்கு நிர்ணயித்து அதற்காக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  கடின உழைப்பு, விடா முயற்சியுடன் உழைத்து இலக்கினை அடைவதில் வெற்றி பெற வேண்டும்.  தொழில் முனைவோராக ஆக விரும்புபவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு கடனுதவிகளை பெற தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகளின் வாயிலாக பெற விண்ணப்பித்து பயன் பெறலாம்.

போட்டித் தேர்வுகளுக்காக தயார்படுத்தும் மாணவ மாணவியர்களுக்காக புத்தகங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட நூலகம், சரஸ்வதி மஹால் நூலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். சத்திரம் நிர்வாக சார்பில் உணவு, தங்குமிடம் வசதிகளுடன் போட்டித் தேர்வு பயிற்சியில் ஈடுபடுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.லெஷ்மி அவர்கள் வரவேற்றார்.  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திரு.எஸ்.கலைச்செல்வன் அவர்கள் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு.ஜி.இரவீந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.வி.பாலசுப்பிரமணியன், உதவி பேராசிரியர்கள் டாக்டர் கே.செல்வகுமார், முனைவர் ஜெ.ஜெ.ஜெயக்குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.