இந்த நிலையில் அதிரை பைத்துல்மாலின் மற்றுமொரு பொதுநல சேவையாக பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நேற்று முதல் தொடங்கியது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி அதிரை பைத்துல்மாலில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்சி பள்ளியை அதிரை பைத்துல்மால் துணை தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக மவ்லவி அப்துல் காதர் ஆலிம் கிராத் ஓதி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கு தையல் பயிற்சி பள்ளியை தொடங்கியது குறித்து அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி அப்துல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
அதிரை பைதுல்மால் அலுவலகத்தின் முதல் மாடியில் தையல் பயிற்சி பள்ளி இயங்குகிறது. பயிற்சியை பெண் பயிற்சியாளர் வழங்க இருக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெறும்.
முதல் ஒரு மணி நேரத்திற்கு மெஷின் பயிற்சி அளிக்கப்படும் பின்னர் இதர பயிற்சி வழங்கப்படும். குறைந்த மாதக்கட்டணமாக ரூ 150 செலுத்த வேண்டும். மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அள்ளிக்கப்படும். பயிற்சி முடிவில் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பை ஓய்வில் இருக்கும் குடும்ப பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அதிரை பைத்துல்மாலில் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.
Thanks to Adirai baitulmal for low cost training . school students also use this opportunity for them future. Alhamthulillah.
ReplyDeleteவேலை இல்லாதவர்களுக்கு ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு என்று சொல்லலாம். ஆரம்ப பயிற்சி முடித்து தன் கற்பனை திறமையால் டிசைன் பண்ணி அதிக வருவாய் பெற ஆரம்ப பள்ளி இதுவே. குறைந்த செலவில் இப்படியொரு பயிற்சி வேறிடத்தில் கிடைக்கவே கிடைக்காது. சமுதாய நலன்கருதி வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் பைத்துமால் செயல் பாராட்டக்கூடியதே - சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்து௧்௧ள்,மாஷாஅல்லாஹ்,சேவைகள்
ReplyDeleteமேலும் செழிக்கட்டும்
வாழ்த்தும்,
ABM ரியாத் கிளை.