அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ஏலத்தை நடத்தினார். இதில் மொத்தம் 109 பேர் ரூ 1 லட்சம் டிடி தொகையை முன்வைப்பு தொகையாக செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டது.
ஈசிஆர் சாலை பகுதியை ஒட்டிய 14 கடைகளை பிளாக் பி எனவும், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை செல்லும் சாலையை ஒட்டிய கடைகளை பிளாக் ஏ எனவும் வகைப்படுத்தப்பட்டது.
முதலில் ஈசிஆர் சாலையை ஒட்டிய கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் கடை ரூ 15, 200 க்கு ஏலம் போனது. பின்னர் ஒவ்வொரு கடைகளாக ஏலம் போனது.
குறைந்தபட்ச மாத வாடகை தொகையாக ரூ 500 லிருந்து ஆராம்பமாகியது அதிகபட்சமாக ரூ 26,900 க்கும், குறைந்த பட்சமாக ரூ 8,100 க்கும் கடைகள் ஏலம் போனது.
ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக ஏலதாரர்களில் சிலர் இரண்டு கோரிக்கைகள் வைத்தனர். இதில் அதிரை பேரூராட்சி விதித்த நிபந்தனைகளில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் 2015-16 ஆம் ஆண்டிற்கு முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் என கூறியிருந்ததால் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிதாரர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ளும் வகையில் ஏலம் நடத்த வேண்டும் என்றனர். மற்றொரு கோரிக்கையாக பேருந்து நிலைய பகுதிகளில் பல வருடங்களாக கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என்றனர்.
மொத்தம் 24 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஏலம் எடுத்தவர்கள் டிடி தொகையை செலுத்தி கையொப்பமிட்டு உறுதி செய்தனர். மீதமுள்ளவர்களுக்கு அவர்கள் செலுத்திய டி.டி தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஏலத்தில் கலந்துகொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கு இரண்டு கடைகளை மனமுவந்து விட்டுக்கொடுத்தது மற்றும் பூ வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவருக்கும் கடைகளை விட்டுக்கொடுத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடைகளை எடுக்க ஏலத்தில் 109 பேர்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்போடு எவ்வித சலசலப்புமின்றி அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஏலத்தில் கேட்கப்பட்ட பெரும்பாலான கடைகள் மாத வாடகை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் அதிரை பேரூந்து நிலையத்தை சுற்றி இருக்கக்கூடிய வணிக கடைகளின் உரிமையாளர்கள் இவற்றை காரணம் காட்டி கடைகளின் மாத வாடகையை உயர்த்திவிடக்கூடிய சூழல் இருப்பதால் பெரும்பாலான வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
- அபூ அஜீம்
// ஜம் ஜம் அஸ்ரப் தான் எடுத்து இருந்த கடையை அதிரை பேரூந்து நிலையைப் பகுதியில் பல ஆண்டுகளாக ஒர்க்ஸ் சாப் கடை நடத்தி வந்த நடராஜனுக்காக விட்டுக்கொடுத்தது மனிதநேயத்தையும்-மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றியது.//
ReplyDeleteWeldone. Impressing. May Allah Bless him.
AL HAMTHULILLAH / ஜம் ஜம் அஸ்ரப் தான் எடுத்து இருந்த கடையை அதிரை பேரூந்து நிலையைப் பகுதியில் பல ஆண்டுகளாக ஒர்க்ஸ் சாப் கடை நடத்தி வந்த நடராஜனுக்காக விட்டுக்கொடுத்தது மனிதநேயத்தையும்-மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றியது.//
ReplyDeleteAL HAMTHULILLAH / ஜம் ஜம் அஸ்ரப் தான் எடுத்து இருந்த கடையை அதிரை பேரூந்து நிலையைப் பகுதியில் பல ஆண்டுகளாக ஒர்க்ஸ் சாப் கடை நடத்தி வந்த நடராஜனுக்காக விட்டுக்கொடுத்தது மனிதநேயத்தையும்-மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றியது.//
ReplyDeleteOne shop is Rs 15000 o my God, why did you give money to government
ReplyDelete