இந்த பகுதியில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இவற்றை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க இந்த பகுதி பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து அதிரை மின்சார வாரியம் சார்பில் புதிய மின்கம்பம் இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் மின்கம்பத்தை நடுவதற்கு தொடர்ந்து காலமாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் தீவிர முயற்சியின் கீழ், அதிரை மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்கம்பம் இன்று நடப்பட்டது. இதன் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். பணிகளை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் உடனிருந்து கவனித்தார்.
இதை சாதாரணமான மனிதன் சுட்டிக்காட்டினாலே அதிரை மின் வாரியம் நடவடிக்கை எடுக்கும்.
ReplyDeleteஇவர் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவிலான செயல் எதுவுமே இல்லை, உள்தெருவில் ஒர்சில இடத்தினுள் சிமெண்ட் சாலை (தேவையற்ற திட்டம்) போட்டது தவிர வேறொன்றுமில்லை என அப்பகுதியினறால் பேசப்படும் உண்மை நிலை.
This comment has been removed by the author.
ReplyDeleteபிலால் நகரில் மிக மிக ஆபத்தான நிலையில் பல மின் கம்பங்கள் உள்ளன.
ReplyDeleteஅவற்றைப் படம் பிடித்துப் பதிவெழுதி மின்வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுகின்றேன்.