பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
நேற்று 2.05.2016 அன்று தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னணியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் செய்யப்பட்டது.
இன்று தஞ்சாவ10ர் மாவட்டத்திலுள்ள சட்ட மன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச் சாவடிகளுக்கு 2501 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. பயிற்சிக்காக 20 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவில் இயந்திரத்தில் வாக்காளர்களின் பெயர் பட்டியல், சின்னம் விரைவில் பதியப்படவுள்ளது அல்லது முகவர்கள் முன்னிலையில் வாக்காளர்களின் பெயர் பட்டியல், சின்னம் விரைவில் பதியப்படுவதை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


8 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைத்தது போல் ஆம்புலன்சில் எடுத்து சென்று பதுக்கிய பணத்தை அதிகாரிகளே பட்டுவாடா பண்ணினாலும் பண்ணுவார்கள். பணத்தேர்தல் நேரத்தில் அறுவடை செய்துக்கொள்ளுங்கள்.
ReplyDelete