தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த இசட். முகமது இலியாஸ் (30), பட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்.
திங்கள்கிழமை இரவு இவருடன், திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலர் கட்டிமேடு ஜெ. ஷேக்தாவூத் (29) உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பட்டுக்கோட்டை வடசேரி சாலையிலுள்ள நேரு நகரில் வாக்கு சேகரிக்க காரில் சென்றனர்.
அப்போது அவ்வழியே காரில் வந்த நேரு நகரைச் சேர்ந்த க. அரசகுமார் (30) உள்ளிட்ட 4 பேர் தங்கள் காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனராம்.
இதை தட்டிக் கேட்ட திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலர் ஷேக்தாவூதை அரசகுமார் கோஷ்டியினர் இரும்புக் கம்பியால் தாக்கியதுடன், வேட்பாளர் முகமது இலியாஸுக்கு சொந்தமான கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினராம்.
மோதலில் காயமடைந்த திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலர் ஷேக்தாவூத் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், அரசகுமார் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் அரசகுமார் உள்பட 4 பேர் மீதும், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது இலியாஸ் உள்பட 6 பேர் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வேட்பாளர் முகமது இலியாஸ் தரப்பை சேர்ந்த அதிராம்பட்டினம் புதுத்தெரு ஏ. முகமது அசாருதீன் (31) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.





தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே வெட்டு குத்துன்னு நடக்குது புதுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளருக்கு அடி உதை இதை ஆளும் கட்சியினர் செய்துள்ளனர் தங்களது ஓட்டை பிரிப்பதால் வரும் வெறிக் கோபம்., மண்ணின் மைந்தரின் வெற்றி கேள்வி ? தான். எத்தனை ஓட்டுகள் நம் சமுதாய மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று பில்லியன் கேள்வி. அரசியலுக்கு பணம் இருந்தால் மட்டும் போதாது ரவுடிசம் தேவை என்பதை சம்பவம் உணர்த்துது. பூரண குணமடைய துஆ.
ReplyDelete