அதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.
அவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
அதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம்.
கடந்த சில நாட்களாக அதிரை நியூஸ் இணையதளம் மற்றும் முகநூலில் நாம் பதியப்படும் சில செய்திகளின் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும், நாகரிகற்ற வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது. பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை தொடர்புகொண்டு வருத்தத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.
அதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமுதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தி வரவேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்.
என்றும் உங்களின் அன்பான சேவையில்,
அதிரை நியூஸ்

பதிவுகளை இடுவதற்கு முன், நன்கு சிந்தித்து, சர்ச்சைகள், மோதல்கள், பின்னூட்டத் தாக்குதல்கள் வருமா என்பதை எச்சரிக்கைக் கருவியாக எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றேன்.
ReplyDeleteசில குறுக்கல் வருவது இயற்கை. ஆனால் அது பிழை அல்ல.
ReplyDeleteஅதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.
ReplyDeleteஉங்களின் இந்த கருத்தில் சிறு மாற்றம்.
சமீப காலமாக உங்கள் வலைத்தளத்தில் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் நீங்கள் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை குறிப்பிட்ட சிலரை பற்றிய பதிவுகள் மற்றும் உங்களுக்கு ஆதயம் உள்ள பதிவுகள் மட்டும் பதிவிடுகிறீரகள்
இதனை சற்று மாற்றிக்கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் பதிவிட்டு உங்கள் வலைதளத்தின் மேல் உள்ள நம்பகதன்மையை பாதுகாத்துக்கொள்ளவும்.
This comment has been removed by the author.
ReplyDelete