.

Pages

Wednesday, January 31, 2018

வாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வது தொடர்பாக

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு கடந்த 10-01-2018 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மீது தொடர் பணியாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் வருடம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு 01-01-2000 வரை பிறந்தவர்கள் அதாவது 01-01-2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த ஆண்டு பெயர் சேர்க்க தவறியவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் தொடர்புடைய நகராட்சி அலுவலகங்களில் படிவம் 6 ஐ பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வயதிற்கான ஆதார சான்று நகல் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார நகல் ஆகியவற்றை இணைத்து படிவம் பெற்ற இடத்திலேயே பூர்த்தி செய்து அளித்திடலாம் அல்லது அருகாமையில் உள்ள அனைத்து  இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
 
புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A  மூலம்) பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம் செய்ய படிவம் 8 ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A-ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றாவண  நகல்களுடன், தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.  தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த வெளிநாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்  படிவம் 6A  அளித்து தங்கள் பெயரினை  வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இந்த தொடர் திருத்த பணியின் போது தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, உரிய மாற்றங்கள் மேற்கொள்ள நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாதவர்கள், Online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 
Online மூலம் வீட்டில் இருந்தோ அல்லது இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.elections.tn.gov.in

அபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

அதிராம்பட்டினம், ஜன.31
அபூர்வ முழு சந்திர கிரகணம் தோன்றியதையடுத்து, அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

நிகழாண்டின் முதல் முழு சந்திர கிரகணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும், திறந்த வெளி மைதானங்களுக்கு சென்றும் முழு சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். மேலும், அதிராம்பட்டினத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் புதுமனைத் தெரு மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், மரைக்காப் பள்ளிவாசல், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல், கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில், இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

சவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணியாற்றத் தடை!

அதிரை நியூஸ்: ஜன. 31
சவுதியில் மேலும் 12 வகையான தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணியாற்றத் தடை விதிக்கப்படுகிறது.

சவுதியில் வேலைவாய்ப்புக்களை சவுதிமயப்படுத்தும் நோக்கில் 12 வகையான தனியார் தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணியாற்ற எதிர்வரும் 2018 செப்டம்பர் முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தனியார் தொழில் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய சேல்ஸ்மேன்கள் அனைவரும் கட்டாயம் சவுதியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

According to the ministry's spokesman Khaled Abalkhail, the following retail categories will become designated as Saudi-only: 

1. Watches
2. Eye-wear
3. Medical equipment and devices
4. Electrical and electronic appliances
5. Auto parts
6. Building materials
7. Carpets
8. Cars and motorcycles
9. Home and office furniture
10. Children's clothing and men’s accessories
11. Home kitchenware
12. Confectioneries

சவுதியில் சுமார் 9 மில்லியன் வெளிநாட்டினர் பணியாற்றி வரும் நிலையில் 'விஷன் 2030' என்ற மாற்றுப் பொருளாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்களில் சவுதிமயப்படுத்தும் நடைமுறைகள் இன்னும் விரைவுபடுத்தப்படும். அதனடிப்படையில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அரசு மற்றும் அமைச்கங்களில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வேலை ஒப்பந்தங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும், மேலும் பெரும் பெரும் மால்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு அந்த வேலைவாய்ப்புக்கள் சவுதியர்களுக்கு வழங்கப்படும்.

தடை செய்யப்பட்ட, சவுதியர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அபராதங்கள் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source:StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

உலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!

அதிரை நியூஸ்: ஜன.31
புதிய ஆய்வறிக்கையின்படி, கடந்த 2017 ஆம் ஆண்டில் 8,230 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியதன் மூலம் இந்தியா உலகளவில் பொருளாதார வளமுள்ள 6-வது  பணக்கார நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது (சில பணக்காரர்களின் நாடு என்பதை தான் பணக்கார நாடு என்று புரிந்து இருப்பார்கள் போல). இந்த ஆய்வை New Wold Wealth என்ற நிறுவனம் நடத்தியுள்ளது.

உலகளாவிய செல்வச் செழிப்பு மற்றும் சந்தை ஆராய்ச்சிகளுக்கான நிறுவனமான New Wold Wealth, a global wealth intelligence and market research company வெளியிட்டுள்ள கருத்துப்படி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களை விட இந்தியர்கள் அதிகம் சொத்து சேர்த்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சொத்துக்கள் 2016 ஆம் ஆண்டிலிருந்த 6,584 பில்லியன் டாலர் அளவிலிருந்து 25 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துள்ளதால் 8,230 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாம். அதாவது 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் 160 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி கண்டுள்ளதாம் அதேவேளை சீனா 198 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகின் முதல் 10 இடங்கள் வகிக்கும் பணக்கார நாடுகளின் பட்டியல்:
10 wealthiest countries in the world by total wealth held, 2017

1. United States: $62,584 billion
2. China: 24,803 billion
3. Japan $19,522 billion
4. United Kingdom: $9,919 billion
5. Germany: $9,660 billion
6. India: $8,230 billion
7. France: $6,649 billion
8. Canada: $6,393 billion
9. Australia: $6,142 billio
10. Italy: $4,276 billion

குறிப்பு: 
இதுபோன்ற ஆளும் தரப்புக்கு ஆதரவான ஆய்வுகள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயம் வரை அடிக்கடி பன்னாட்டு ஆய்வு நிறுவனங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி வரக்கூடும். 

இந்தியா பணக்கார நாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும் பொதுமக்களுக்குப் பயன்படாத அந்தப் பணங்கள் யாரிடம் பதுங்கியுள்ளது என்பதும் சாதாரண இந்தியர்களுக்கும் தெரிந்ததே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதி!

அதிரை நியூஸ்: ஜன.31
சமீபத்தில் அபுதாபியின் மப்ரக் - குவைபத் நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது அறிந்ததே. அமீரகம் மற்றும் சவுதியை இணைக்கும் இந்த சர்வதேச சாலைக்கு ஷேக் கலீஃபா சர்வதேச சாலை என்ற பெயரும் சூட்டப்பட்டது.

இந்த சர்வதேச சாலையில் வாகனங்கள் பயணிக்க உச்சபட்ச வேகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லலாம். மணிக்கு 161 கி.மீ என்ற நிலையை எட்டும் போது போக்குவரத்து ரேடார் கேமிராக்களில் சிக்க நேரிடும்.

மேலும் இந்த சாலையில் பல புதிய நிரந்தர கேமிராக்களும், வாகனங்களில் பொருத்தப்பட்ட கேமிராக்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,700 திர்ஹம் அபராதம் விதிப்பு

அதிரை நியூஸ்: ஜன.31
கடந்த ஜனவரி 25 ஆம் அன்று துபை முரக்கபாத் அருகே ஒரு நைட் கிளப்பில் மூக்குமுட்ட குடித்த 30 வயது மதிக்கத்தக்க ஆசிய நாடு ஒன்றைச் சேர்ந்த டிரைவர் ஒருவர், தான் ஓட்டி வந்த வாகனத்தை சிக்னலுக்காக நிறுத்தினார்.

சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தும் அவர் வாகனத்தை நகர்த்த வில்லை ஆதலால் பின்னால் வந்த வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து போலீஸார் வந்தனர். அந்த டிரைவர் போதையின் காரணமாக ஸ்டியரீங்கில் படுத்து தன்னிலை மறந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

குடிகார டிரைவரை தூக்கிக் கொண்டு போன போலீஸார் போக்குவரத்து குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தினர். அங்கு அவருக்கு 15,700 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 3 மாதங்களுக்கு டிரைவிங் லைசென்ஸூம் ரத்து செய்யப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து பின் வாங்கியது மத்திய அரசு

அதிரை நியூஸ்: ஜன. 31
10 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாதவர்கள் என இந்தியர்களை சமூக, பொருளாதார பிரிவுகளின் கீழ் தனியாக பிரித்து தற்போது நடைமுறையிலுள்ள கரும் நீல வண்ண பாஸ்போர்டிற்கு பதிலாக அவர்களுக்கு என ஆரஞ்சு (காவி) நிறத்தில் தனி பாஸ்போர்ட் வழங்கவும், பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் தற்போது வரை அச்சிடப்பட்டு வரும் பெற்றோர் மற்றும் அட்ரஸ் குறித்த விபரங்களை ஒட்டு மொத்தமாக தூக்கிக் கடாசவும் திட்டமிட்டது இந்திய மத்திய அரசு.

இந்தியர் என்பதற்கான முகவரி சான்றாக பயன்படும் கடைசி பக்க நீக்கம் மற்றும் இந்தியர்கள் மத்தியில் சமூக, பொருளாதார அடிப்படையில் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கும் தனி நிற பாஸ்போர்ட் திட்டம் மற்றும் கட்டாய குடியகல்வு சான்றுகள் (ECR / ECNR) ஆகியவை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் புதிய பாஸ்போர்ட் கொள்கைகளை எதிர்க்கும் பொதுநல வழக்கு ஒன்று கேரள மாநில உயர்நீதி மன்றத்தில் ஷாஜஹான் என்கிற 10 வது படிக்காத நபர் ஒருவரின் சார்பாக அமீரகத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ஷம்சுதீன் கருணாகப்பள்ளி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டமை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது.

இதனையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ராவிஷ்குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்போது பாஸ்போர்ட் நிறத்தை மாற்றும் திட்டமில்லை என்றும் அதேபோல் முகவரி அடங்கிய கடைசி பக்கத்தையும் நீக்கப்பட மாட்டாது எனவும் தற்போதுள்ள நடைமுறைகளின் படியே மாற்றங்களின் இன்றி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

வீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையாசிரியர் ~ பெற்றோர்கள் பாராட்டு!

பேராவூரணி ஜன.31
இரவில் மாணவர்கள் படிக்கிறார்களா என வீடு சென்று ஆய்வு செய்யும்
தலைமையாசிரியரின் செயலுக்கு  பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் வீ.மனோகரன்.  இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 620 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். ஏழை, எளிய, பெரும்பாலும் படிப்பறிவற்ற குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களாக  இருப்பதால், தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு  உள்ளனர்.

இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமையாசிரியர் வீ.மனோகரன் தனது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சரவணக்குமார், நீலகண்டன், செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோருடன், இரவு நேரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று,  இரவு நேரத்தில் படிக்கிறார்களா என கண்காணிப்பதுடன் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அப்பொழுது மாணவர்களின் படிப்புக்கு தேவையான நோட்டு, பேனா போன்றவற்றை அளிப்பதுடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக்கவனம் செலுத்தி செயலாற்றி வருகின்றார். சில வீடுகளில் குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுவதை நேரடியாக பார்த்து சிஎல்எப் பல்ப், டியூப் லைட் அமைக்கவும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சொந்த பணத்தில் இருந்து மின்விளக்கு அமைக்க உதவுகின்றனர்.

ஆசிரியர்கள் ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் 9 மணி வரை விழித்திருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை பெற்றோர் முன்னிலையில் வழங்கி மாணவர்களை கௌரவிக்கின்றனர். அதே நேரத்தில் இரவு நேரத்தில் படிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம், " இனிமேல் பரிட்சை முடியும் வரை டிவி பார்க்க மாட்டேன்" என உறுதியையும்  வாங்குகிறார். தலைமையாசிரியர் வீ.மனோகரனின் செயலால் பெற்றோர்களும் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்த தொடங்கி விடுகின்றனர்.

இதற்கு பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இது பற்றி இப்பள்ளியில் படித்துவரும் 11வது வகுப்பு மாணவி நாகவேணி தந்தை வீராச்சாமி கூறும்போது தனியார் பள்ளி போன்று மாணவர்கள் மீது அக்கறையுடன் செயல்படும் தலைமையாசிரியர் மனோகரன் இப்பள்ளிக்கு கிடைத்த வரம் என கூறினார். இதனால் குருவிக்கரம்பையில் படித்து வரும் நாடியம், கரம்பக்காடு, முனுமாக்காடு, வாத்தலைக்காடு பகுதி மாணவர்கள் வரும் பொதுத்தேர்வுக்கு மிகுந்த ஆர்வத்துடன் தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரனிடம் கேட்டபோது, " நானும் இதே பள்ளியில் படித்து,  இப்பொழுது இங்கேயே தலைமையாசிரியராக உள்ளேன். சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராமத்தினர் ஒத்துழைப்பால், பெரிய மாற்றத்தை உருவாக்க திட்டமிட்டோம். மாணவர்களை இரவு நேரங்களில் அவர்களது வீடுகளுக்கே சென்று, படிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறோம். இது பொதுத்தேர்வு முடியும் வரை தொடரும். மேலும் மாணவர்களின் உடல்நலன், மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு கவனித்து உளவியல் ஆலோசனை தருகிறோம். பெற்றோர்களும் மாணவர்களின் கல்விக்காக தனிக்கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவுகளை தரவேண்டும். தொலைக்காட்சிகளை சிறிது காலம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் அமைதியான சூழலில் படிக்கும் வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசுப்பள்ளியையும் தனியார் பள்ளி போல மாற்றும் எங்களின் செயல்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆதரவாக உள்ளனர். வரும் பொதுத்தேர்வில் எங்கள் மாணவர்கள் சிறப்பிடம் பெறுவர்" என்றார்.

பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் வீடுதேடிச் சென்று காரணம் தெரிந்து, வெறுமனே விடுமுறை எடுக்கும் மாணவர்களை பள்ளிக்கு ஆசிரியர்கள் அழைத்து வந்து விடுவர். ஒருமுறை பள்ளிக்கு கட் அடித்து விட்டு, மொய் விருந்து விழாவில் சாப்பிட உட்கார்ந்திருந்த மாணவனை, அங்கிருந்து அழைத்து வந்த சம்பவங்களெல்லாம் உண்டு என மாணவர் நீலகண்டன் சிரிப்போடு கூறினார்.

தலைமையாசிரியர் மனோகரன், அவருக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் செயலால் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தனித்துவமாக அமைகிறது.
 

Tuesday, January 30, 2018

தஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.01.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அனைத்து வங்கியாளர்களும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனுக்குடன் தீர்வு கண்டு கடனுதவி வழங்கிடவும், சுய தொழில் முனைவோர் வளர உதவி செய்ய வேண்டுமெனவும், நமது மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட மானியத் தொகையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட வேண்டிய இலக்கீடு முழுமையாக எட்டும் வகையில் அனைத்து வங்கிகளும் செயல்படவேண்டும்.  நமது மாவட்டத்;தில் ரூ.333 கோடி ஒதுக்கப்பட்டள்ளது. அதில் இதுவரை  ரூ.192.83 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  ஊராட்சி அளவிலான குழுக்களின் கட்டமைப்பிற்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட பெரும் கடன் நிலுவைகள் விரைவாக வழங்கிட வேண்டும்.  அதை போல் வங்கிகள் தோறும் அமைக்கப்பட வேண்டிய சமுதாய அளவிலான கடன் திருப்பித்தல் குழு கூட்டம் (CBRM – Community Based Recovery Mechanism) மாதந்தோறும் நடத்திட வேண்டும்.  தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி நபர் கடன் மகளிர் குழுக்களுக்கான கடன், தொழிற்கடன், நேரடி கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு தனி நபர் கடன் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், குழுக்கடன் அதிகபட்சமாக ரூ.10 இலட்சமும் வழங்கிடலாம். 

மேலும், முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கு மாதாமாதம் அரசு வழங்கும் உதவித்தொகைகள் தாமதமின்றி தடையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் தியாகராஜன், நபார்டு வங்கி துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் தியாகராஜன், வேளாண் துறை துணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜஸ்டின், இந்தியன் வங்கி, பாரத வங்கி, இந்தியன் ஓவர்சீங் வங்கி, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அஞ்சலி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 

'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில் என்னை காயப்படுத்துகின்றது ~ கல்ஃப் நியூஸ் ஆசிரியர் குமுறல் (சிறப்புக் கட்டுரை)

அதிரை நியூஸ்: ஜன.30
பத்மாவத் எனும் ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து வடமாநிலங்களில் எதிர்ப்பாளர்களால் பயங்கர கலவரங்கள் நடத்தப்பட்டன ஆனால் நியாயமாக பொங்கி எழுந்திருந்திருக்க வேண்டிய இந்திய முஸ்லீம்கள் அமைதியாக கடந்து செல்கின்றனர். 

இந்நிலையில் துபையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரியான கல்ஃப் நியூஸ் (Gulf News) பத்திரிக்கையின் ஆசிரியர் பாபி நக்வி (Bobby Naqvi) அவர்கள் இத்திரைப்படம் தொடர்பில் தனது உள்ளக்குமுறல்களை வெளியிட்டுள்ளதுடன் டெல்லியை ஆண்ட சுல்தான் பற்றிய அரிய பல வரலாற்றுத் தகவல்களை தருகின்றார்.

பொதுவாக, வட நாட்டு விஷயங்கள் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாத தமிழகத்தினருக்கு குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் இந்த வரலாற்றுச் செய்திகளை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாற்று திரிபுகளுக்கு தகுந்த கண்ணியமான, அறிவுப்பூர்வ எதிர்வினைகள் பிற சமூக மக்களின் உள்ளங்களை தொடும் வகையில் அமைய வேண்டும். 

பாபி நக்வி அவர்களுடைய பதிவை அதன் சாரம் சிதையாமல் அப்படியே தருவதற்கு ஓரளவு முயற்சித்துள்ளேன். மூல ஆங்கிலப் பதிவை வாசித்தவர்கள் தவறைச் சுட்டினால் திருத்திக் கொள்கின்றேன்.

இவண்
நம்ம ஊரான்

இனி பாபி நக்வி அவர்களுடைய எழுத்தில்...

ஓரு இந்திய முஸ்லீம் என்ற வகையில் பத்மாவத் திரைப்படம் எவ்வாறு என்னை காயப்படுத்துகின்றது

//இத்திரைப்படம் இந்தியாவில் முஸ்லீம் சமூகம் மோசமான சூழல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அரசர்கள் செய்தவையாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு இன்றைய முஸ்லீம் சமூகம் பொறுப்பேற்க வற்புறுத்தப்படுகிறது.//

திரைப்படத் துறையினர் வரலாற்று கட்டங்களை படமாக்குவதற்கான கலைச் சுதந்திரங்களை பெற்றவர்களே என்றாலும் அவர்கள் மனம் விரும்பும் போக்கில் வரலாற்றை மாற்றியமைக்க உரிமை பெற்றவர்கள் அல்ல.

கடந்த வாரம் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்று இந்தியாவின் சில பகுதிகளில் வன்முறைகள் மற்றும் பெரும் விவாதங்கள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்தது.

சினிமா விமர்சகர்கள் பத்மாவதி என்கிற ஹிந்து ராஜபுத்திர ராணி ஒருவர் முஸ்லீம் சுல்தான் ஒருவரின் படையெடுப்பை தீவிரமாக எதிர்த்ததை மிக கண்கவர் அழகியலோடு படம் பிடித்துள்ளதாக பாராட்டியுள்ளனர் ஆனால்,
டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி என்பவர் மாட மாளிகைகள், அழகிய ஆடை அலங்காரங்கள் மற்றும் மனம் மயக்கும் இசையுடன் சேர்த்து நேர்த்தியாக வரலாற்றை வரலாறாக சொல்வதை கைவிட்டுவிட்டு முஸ்லீம்களை வதைப்பதற்காக தன் பங்கிற்கு இன்னொரு குச்சியை எடுத்து வலதுசாரி ஆதரவாளர்களிடம் தந்துள்ளார்.

இத்திரைப்படம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி கவிஞரான முஹமது இக்பால் ஜயாஸி என்பவரின் காவியத்தை அடிப்படையாக கொண்டது. இக்காவியத்தின் அடிப்படையில் அலாவுதீன் கில்ஜி என்ற டெல்லி சுல்தான் சித்தூர் அரசு மீது படையெடுத்து கைப்பற்றியது, சித்தூர் ராணி பத்மாவதியின் கணவரை போரில் சுல்தான் கொன்றதை தொடர்ந்து ராணி பத்மாவதி மேற்கொண்ட உயிர்த்தியாகம் பற்றி பேசுகிறது.

கற்பனை பாத்திரம்:
பெரும்பாலான சரித்திர ஆசிரியர்களின் கருத்துப்படி, 1540 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜி இறந்தபின் சுமார் 200 ஆண்டுகள் கழித்துப் பிறந்த முஹமது இக்பால் ஜயாஸி என்ற கவிஞன் உருவாக்கிய கற்பனை பாத்திரம் தான் 'ராணி பத்மாவதி' என ஒப்புக் கொண்டுள்ளனர்.

பத்மாவத் டைரக்டர் பன்சாலியின் இயக்கமும் திரைக்கதையும் ஹாலிவுட் படமான டிராய் (Troy) என்பதுடன் ஒப்பிடுகையில் அதைவிட மிகச்சிறந்த முறையில் ஜயாஸியின் கதையை படமாக்கியுள்ளார் என்பதை மறுக்க இயலாது.

டைரக்டர் பன்சாலி ஜயாஸியின் கற்பனை கதையிலோ அல்லது வேறு எந்த வரலாற்று புத்தகங்களிலோ காணப்படாத வரலாற்றுத் திரிபை புகுத்தியதன் மூலம் ஒரு உண்மையான அரசனை ஒரு காட்டுமிராண்டியாகவும், பெண் பித்தனாகவும் உருவகப்படுத்தி வரலாற்றின் அடிப்படையையே தகர்த்துள்ளார்.

யார் இந்த அலாவுதீன் கில்ஜி?
கில்ஜி உண்மையில் மிருகத்தனம் உடையவரா?

இந்தக் கேள்விக்கு பதில் அறிய விரும்புபவர்கள் வரலாற்றை ஊனப்படுத்தும் 'பான்சாலி'த்தனமான கொடூர சிந்தனைகளிலிருந்து விலகி தூய மனதுடன் வரலாற்று பக்கங்களை தேடிப் படிக்க வேண்டும்.

1296 முதல் 1316 முதல் டெல்லியை ஆண்ட சக்தி வாய்ந்த அரசனே அலாவுதீன் கில்ஜி. கில்ஜி மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். அவர் காட்டிய வழியிலேயே அவருக்குப் பின் வந்த முகலாய மன்னர்களும், பிரிட்டீஷ் அரசும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை வரி மற்றும் வருவாய் வசூல்களை மேற்கொண்டு வந்தனர்.

அத்தியாசிய உணவுப் பொருட்கள் மற்றும் அதன் விலையின் மீது தினசரி நேரடி கள ஆய்வுகள் நடத்தி வந்ததுடன் விலைவாசிகளை கட்டுக்குள் வைத்திருந்தார். பஞ்சம் பட்டினியை வருமுன் சமாளிக்கும் திட்டத்துடன் பல தானிய சேமிப்புக் கிடங்குகளை கட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச் சிறந்த ராணுவத் தளபதியாகவும் விளங்கினார்.

தனது 20 வருட ஆட்சியில் காட்டுமிராண்டி மங்கோலியப் படைகளை 6 முறை தோற்கடித்ததன் மூலம் மங்கோலியர்களால் இந்தியாவிற்கு நிகழவிருந்த பேராபத்துக்களை தடுத்து நிறுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கின்றனர்.

செங்கிஸ்கான் மற்றும் அவரது வாரிசுகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட மங்கோலிய ஆதிவாசிப்படைகள் கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, பெர்ஷியா, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளை நரவேட்டையாடி வெற்றி கொண்டிருந்தனர்.

நாய், பூனைகளை கூட கொன்றொழித்த மங்கோலியர்கள்:
அமெரிக்க வரலாற்று ஆசிரியரான ஜெரிமியா கார்டின் கருத்துப்படி, மங்கோலியர்கள் தங்களின் ரணகள வெறியாட்டத்தின் போது குறுக்கே வந்த நாய், பூனைகளைக் கூட விட்டு வைக்காது கொன்றொழித்தவர்கள்.

இன்னொரு வரலாற்று ஆசிரியரான சேஷாத்ரி குமார், மங்கோலியர்கள் படையெடுத்து நாடுகளை கைப்பற்றி வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டவர்கள் அல்ல மாறாக அங்கு நிலவும் கலாச்சாரத்தையே வேரோடு அழிப்பவர்கள் என குறிப்பிடுகின்றார்.

செங்கிஸ் கான் தலைமையில் பெர்ஷியாவை வெற்றி கொண்ட மங்கோலியர்கள் அப்போது சுமார் 6 மில்லியன் மக்களையும் கொன்றொழித்துள்ளனர் அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 1.5 சதவிகித மக்களை கொன்று தீர்த்தவர்கள். இவர்கள் மட்டும் இந்திய படையெடுப்புக்களில் அலாவுதீன் கில்ஜியை முறியடித்து வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவையே துவாம்சம் செய்து கற்பனைக்கு எட்டாத அழிவை ஏற்படுத்திச் சென்றிருப்பார்கள் என மேலும் கூறுகிறார்.

பன்சாலியோ தனது திரைப்படத்தில் கில்ஜியை ஹிந்துப் பெண்களின் பின் சுற்றும் போக்கிரியாகவும், எப்போதும் தின்று கொழுக்கும் மிருகமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.

கில்ஜி ஒரு போதும் பெண்களுக்காக போர் நடத்திக் கொண்டிருக்கவில்லை மாறாக அன்றைய மரபுப்படி ஒரு சுல்தானாக தனது நாட்டு எல்லைகளை விரிவாக்குவதிலும் எதிரி நாடுகள் மீது வெற்றி கொள்வதையும் மேற்கொண்டிருந்தார். பாரசீக நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றி ஆட்சி நடத்தியவரே தவிர வெறும் கைகளால் இறைச்சிகளை குத்திக் கிழிக்கும் வித்தைக்காரர் அல்ல அவர்.

வரலாற்று ஆய்வாளர் ராணா சப்வி அவர்களின் கூற்றுப்படி, கில்ஜியின் ஆட்சி காலத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்களும், தூதர்களும் அதிகளவில் டெல்லிக்கு வருகை புரிந்ததால், பாக்தாத், கெய்ரோ, கான்ஸ்டான்டின்நோபில் ஆகிய நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்று எழுந்தது.

கில்ஜி, இரண்டாம் அலெக்ஸான்டர் எனப்பொருள் தரும் ஸ்கந்தர்-இ-தானி என்று தான் அறியப்பட வேண்டும் என விரும்பினார். பொருளாதாரத்தை நிலையாக பேணும் நோக்கில் விலைவாசி கட்டுப்பாடு, மதுபானத் தடை போன்ற பல மக்கள் நல சீர்திருத்தங்களை புகுத்தியவாறு இருந்தார்.

நில வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அரசு வருவாயை முறையாக  உயர்த்தினார். இந்த வருவாய்கள் மூலமே மங்கோலியர்கள் உள்ளிட்ட எதிரிகளுக்கு எதிரான வலிமையான இராணுவத்தை அவரால் கட்டமைக்க முடிந்தது எனவும் ராணா சப்வி தெரிவிக்கின்றார்.

பத்மாவத் வெளியீட்டின் போது நடைபெற்ற வன்முறைகளுக்கு ராஜபுத்திரர்களின் மீது கலங்கம் சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது ஆனால் படம் வெளியான பின்னால் டைரக்டர் பன்சாலி உண்மையில் ராஜபுத்திரர்களுக்கு சிறப்பானதொரு அஞ்சலி தான் செலுத்தியுள்ளார் என்று அறிந்தவுடன் கலவரங்கள் தானாகவே அடங்கியது.

ஆயினும் டைரக்டர் பன்சாலி, கில்ஜி என்ற முஸ்லீம் மாமன்னரை ஒரு பாசிச மன்னராக, பெண்பித்து பிடித்தவராக காட்சிப்படுத்தியுள்ள வெட்கக்கேடும், உள்ளத்து மறைமுக கெட்ட எண்ணங்களுமே மேற்படி கலவரங்கள் தனிய உதவியுள்ளது.

நான் ஒரு இந்திய முஸ்லீம் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என்று இன்று சிதறிக்கிடக்கும் மண்ணை அன்று சுமார் ஆயிரம் ஆண்டுகள் நெருக்கத்தில் எம்முன்னோர்களான முஸ்லீம் மன்னர்களும், சுல்தான்களும் ஆட்சி செய்து அவர்களின் மண்ணை, மரபுகளை, கலாச்சாரத்தை, நிர்வாகத் திறன்களை பெருமைபடத்தக்க விதத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளை என்னைப் போன்ற இந்திய முஸ்லீம்களை, இந்தியாவில் முஸ்லீம் சமூகம் ஆட்சியாளர்கள் மூலம் மோசமான சூழல்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள நேரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த அரசர்கள் செய்தவையாக சித்தரிக்கப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க வற்புறுத்துகிறது.

டைரக்டர் பன்சாலியின் இச்சித்திரத்தை படைப்பாளியின் சுதந்திரம் என்று கருதுவதை விட படைப்புச் சுதந்திரத்தின் பெயரால் நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்றே கருதலாம்.

பேச்சுரிமைக்கு என்றும் ஆதரவாக குரல் தரும் நான் அதன் சந்தேகத்தின் பலனைக்கூட பன்சாலிக்கு விட்டுத்தர விரும்பவில்லை.

சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்ததோர் வெகுஜன ஊடகம் அதன் கேமராக்களின் பின்னால் இருப்பவர்கள் மிகவும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது மிக மிக அவசியம்.

இறுதியாக, பல்முனைகளில் இருந்தும் அநியாயமாக தாக்கப்பட்டு வரும் சமூகத்தை மேலும் ஒரு முனையிலிருந்து தாக்குதல் நடத்திய ஆயுதமாகவே பத்மாவத் திரைப்படத்தை கருதுகிறேன்.

என நிறைவு செய்துள்ளார் கல்ஃப் நியூஸ் ஆசிரியர் பாபி நக்வி அவர்கள்.


Bobby Naqvi
With over 20 years of experience in journalism, Bobby Naqvi has worked with several publications. He began his career in journalism in central Indian city of Bhopal. Before joining Gulf News in 2002 in Dubai, he worked with MP Chronicle, United News of India, Down To Earth and Hindustan Times in India. He joined XPRESS in 2006 and has been the Editor since 2010.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் !

அதிரை நியூஸ்: ஜன.30
துபையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வணிக நடவடிக்கைகள் சார்பு பணப்பரிவர்த்தனைகளின் மீது 'Innovation Fees' என்கிற 10 திர்ஹம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இந்த தொகை துபையின் கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் 50 திர்ஹத்திற்கு கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளின் மீது வசூலிக்கப்படாது. பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்பட்டாலும் இந்த தொகை திருப்பித் தரப்படமாட்டாது. அதேவேளை சுகாதாரத் துறை பரிவர்த்தனைகள் (Healthcare Services) மற்றும் போக்குவரத்து அபராதங்கள் மீதும் இந்த இன்னோவேட்டிவ் திர்ஹம் எனும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஏற்கனவே அறிவுசார் (Knowledge Dirham) திர்ஹம் என்ற பெயரில் 10 திர்ஹம் வசூலிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் (முழு விபரம்)

அதிரை நியூஸ்: ஜன.30
ஓமனில் 87 வகையான வேலைகள் மீது புதிதாக வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் (முழு விபரம்)

பெட்ரோல் வள நாடான ஓமனில் பிற வளைகுடா நாடுகளைப் போலவே வெளிநாட்டினர் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். ஓமனின் மனிதவளத் துறை அமைச்சகம் 87 வகையான வேலைவாய்ப்புக்களின் மீது புதிதாக வெளிநாட்டினருக்கு விசா வழங்கிட 6 மாத காலத்திற்கு தடை விதித்துள்ளது.

Here's the full list of professions that have been impacted by the decision:

Information and Technology

1.Information Security Specialist

2.Geographic Information System Specialist

3.Electronic Computer Networks

4.Programmed Machines Maintenance - Electronic

5.Electronic Calculator Maintenance

6.Graphic Designer

7.Electronic Surveillance - Equipment Assembly

8.Electronics Technician - Telecom

9.Electronics Technician - Control Instrument

10.Electronic Technician - Medical Equipment

11.Electronics Technician Broadcast

12.Electronic Technician - Programmed Machines

13.Electronic Technician - Computer Networks

14.Computer Programmer

15.Computer Engineer

16.Computer operator

Accounting and Finance

1.Bank Notes and Money changer

2.Bank notes technician

3.Account Auditing technician

4.General accounting technician

5.Cost account technician

6.Costs accountant

7.Insurance collector

Marketing and Sales

1.Sales specialist

2.Storekeeper

3.Commercial agent

4.Commercial manager

5.Procurement logistics specialist

Administration and Human Resources

1.Business Administration Specialist

2.Public Relation Specialist

3.Human Resources Specialist

4.Administrative Director

Insurance

1.Insurance Agent General

2.Real Estate Insurance Agent

3.Cargo Insurance Agent

4.Life Insurance Agent

5.Vehicle Insurance Agent

6.Factory Insurance Agent

Information/Media Professions

1. Media Specialist

2. Page Maker

3. Paper Pulp Machine Operator

4. Bookbinding Machine Operator

5. Decorative Books Operator of

6. Calendar Operator

7. Paper Dyeing Machine Operators

8. Bill Printing Machine Operator

9. Cylinder Press Operator

10. Rotating Press Operator

11. Offset Printing Machine Operator

12. Color Press Operator

13. Palnographic Press Operator

14. Paper Folder Machine Operator

15. Paper Coating Machine Operator

16. Advertising Agent

Medical Professions

1. Male Nurse

2.Pharmacist Assistant

3. Medical Coordinator

Airport Professions

1. Aviation Guiding Officer

2. Ground Steward

3. Ticket controller

4. Airplane takeoff Supervisor

5. Air traffic controller

6. Aircraft Landing supervisor

7. Passenger Transport supervisor

8. Land Guide

Engineering Professions

1. Architect

2. General Survey Engineer

3. Civil Engineer

4. Electronic Engineer

5. Electronics Engineer

6. Mechanical Engineer

7. Projects Engineers

Technical Professions

1. Building Technician/Building Controller

2. Electronic Technician

3. Road Technician/Road Controller

4. Mechanical Technician

5. Soil Mechanics Laboratory Technician

6. Steam Turbine Technician

7. Construction materials lab technician

8. Gas Network Extension Technician

9. Construction Technician

10. Transformer Technician

11. Station Technician

12. Electrical Technician

13. Heat Operations Technician

14. Maintenance Technician

15. Chemical Technician

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

மதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் மௌலான தோப்பில் ஆறு குடிசை வீடுகள் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு தீ விபத்து நிவாரண உதவித் தொகையாக தமிழக அரசு தலா ரூ.5000மும், ஒரு செட் வேட்டி சேலையும், 5 கிலோ அரிசியும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட 1) புஷ்பலதா, க.பெ.ராஜ், 2) கவிதா க.பெ.காசி, 3) கார்த்திகா, க.பெ. ரகுபதி, 4) லோகாம்பாள், க.பெ.பாஸ்கர், 5) சம்சுதீன், த.பெ. அப்துல் மஜிது, 6) காவேரி, க.பெ. பெரமையன் ஆகிய  6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000மும், மொத்தம் ரூ.30,000மும், 2 செட் வேட்டி சேலையும் வழங்கினார்.  பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் தனது சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட 6 நபர்களுளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.12,000மும் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட 6 நபர்களின் குடும்பங்களுக்கு வருமானச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, போன்ற சான்றிதழ்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மதுக்கூர் கூட்டுறவு பால்வள தலைவர் துரைசெந்தில், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குருசேவ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுபராஜேந்திரன், கார்த்திகேயன், வட்டாட்சியர்கள் ரகுராமன், ஏ.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Monday, January 29, 2018

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 5 ஆம் ஆண்டு விழா பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை எலும்பியல் மருத்துவர் எம். செல்லப்பன், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ஏ. முகமது அப்துல் காதர், எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி கல்வியில், விளையாட்டில்
சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும்  சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும், எல்கேஜி முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கல்வி கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டது.

விழாவில், பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக, பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு பேசினார். விழா முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

இந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்கு தடை!

அதிரை நியூஸ்: ஜன.29
இந்தோனேஷியாவில் வித்தியாசமாக 2 முன்பக்கங்களுடன் தயாரிக்கப்பட்ட காருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் பண்டூங் பகுதியைச் சேர்ந்த 71 வயது ரோனி குணவான் என்ற கார் மெக்கானிக்கிற்கு நீண்டநாட்களாக மனதில் ஒரு வித்தியாசமான ஆசை.

ஒருவழியாக 2 ஆரஞ்சு நிற டயோட்டா கார்களை வாங்கி சரிபாதியாக வெட்டி பின்பு 2 முன்புறப் பகுதிகளையும் வெல்டிங் மூலம் இணைத்து 2 முன்பக்கங்கள் உடைய ஒரே காராக மாற்றி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் எனினும் அதை கொண்டாட முடியவில்லை, ஏன்!

2 முன்பக்கங்களுடன் 2 இஞ்சின் 2 ஸ்டியரிங் இத்யாதிகளுடன் 2 பக்கமும் இயங்கும் தன்மையுடன் மறுவடிவமைக்கப்பட்ட இந்தக்காரை சாலைகளில் இயக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தடைவிதித்தனர் மேலும் அனுமதியின்றி காரை மறுவடிவமைப்பு செய்ததற்காக அபராதமும் விதித்தனர்.

இது புதிய இந்தோனேஷியா, ஒரு புதிய முயற்சியை முடங்கிப் போக விடமாட்டேன், மீண்டும் சாலையில் இயக்குவதற்கான அனுமதியை பெறுவேன் என சபதமெடுத்துள்ளார் குணவான்.

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

வரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்திர கிரகணம்' ~அரபு நாடுகளில் பார்க்கலாம்

அதிரை நியூஸ்: ஜன. 29
ஜனவரி 31 தேதி புதன்கிழமை அன்று அரிய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' அரபு நாடுகள் பகுதியில் பார்க்கலாம்

எதிர்வரும் 2018 ஜனவரி 31 ஆம் தேதி இரவில் 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 3 முக்கிய நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' நிகழவிருக்கின்றது.

இந்த அதிசய அரிய நிகழ்வை வட அமெரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகள், ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு (அரபு நாடுகள்), ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணக் கிடைக்கலாம். இதுவோர் வானியல் அதிசயம் என வர்ணிக்கப்பட்டுள்ளது.

1. ஒரே மாதத்தில் 2 பௌர்ணமிகள் வருவது பொதுவாக 2 வருடங்கள் 8 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும். இதற்கே நீல நிலா என பெயர்.

2. சூப்பர் மூன் எனப்படுவது பூமியின் சுற்றுப்பாதைக்கு 14 சதவிகிதம் நெருங்கி வருவதுடன், 30 சதவிகிதம் கூடுதல் வெளிச்சத்துடனும் இலங்கும். இந்த அரிய நிகழ்வும் சமீப மாதங்களில் மூன்றாவது முறையாக நிகழவுள்ளது.

3. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை நேர்கோடுகளில் வருவதால் ஏற்படுவது சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தின் போது நிலா சிவந்து காணப்படும். இந்த முறை சந்திர கிரகணம் சுமார் 1 மணிநேரம் 16 நிமிடங்கள் நீடிக்கும்.

3 பெரும் நிகழ்வுகள் இணைந்து நிகழும் இந்த அரிய 'சூப்பர் சிவப்பு, நீல நிற சந்திர கிரகணம்' எனும் நிகழ்வை எந்தவித புறச்சாதனங்களும் இன்றி நேரடியாக நம் கண்களால் பார்க்கலாம். யுனைடெட் ஸ்டேட்ஸின் (அமெரிக்கா) மேற்குப் பகுதி மற்றும் கனடாவில் அதிகாலை நேரம் உதிக்குமுன்பாக இந்த நிகழ்வை ரசிக்கலாம்.

மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ரஷ்யாவின் கிழக்குப் பகுதி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளிலிருந்து சந்திரன் உதிக்கும் சமயத்திலும் இதை பார்க்கலாம்.

இதற்குமுன் இத்தகைய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா' சந்திர கிரகணங்கள் 1982 டிசம்பர் 30 ஆம் தேதியும், 1844 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியும், 1866 மார்ச் 31 ஆம் தேதியும் நடைபெற்றுள்ளன.

சந்திர கிரகணங்கள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திர கிரகண சமயத்தில் சூப்பர் மூன் இணைந்து நிகழ்ந்தது. சூப்பர் மூன்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 முதல் 6 முறை வரை நடைபெறும். அடுத்த சூப்பர் மூன் சந்திர கிரகணம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி நிகழும் என்றாலும் அன்றைய தினம் நீல நிலா நிகழ்வு நடைபெறாது.

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வானிலை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜன. 29
அமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமீரகத்தில் பலத்த புழுதிக்காற்று 2 நாட்களுக்கு பலத்த புழுதிக்காற்று வீசுவதுடன் வானம் மேக மூட்டமாகவும் காணப்படும் என அமீரக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு காற்று மணிக்கு சராசரியாக 25 கி.மீ முதல் 35 கி.மீ வரை வீசும், உச்சபட்சமாக மணிக்கு 60 கி.மீ வரை வீசவும் வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் பகுதி மேகமூட்டமாகவும், சூழல் மங்கலாகவும் தெரிவதுடன் தட்பவெப்பம் இன்னும் குறைந்து காணப்படும். கடற்கரை பிரதேசங்களில் 12 முதல் 24 டிகிரி செல்ஷியஸ், நாட்டின் உட்பகுதிகளில் 11 முதல் 26 டிகிரி செல்ஷியஸூம், மலைப் பிராந்தியங்களில் 8 முதல் 20 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தும் இருக்கும்.

அரபிக் கடல் மற்றும் ஓமன் வளைகுடா கடல்களில் காற்று அழுத்தத்தினால் அலைகள் 8 முதல் 12 அடிவரை உயர்ந்து காணப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் சலுகை!

அதிரை நியூஸ்: ஜன.29
ஓமனில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆண்களும் பிறரைப் போல நேரடியாக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதுவரை முதலில் மேனுவல் டிரைவிங் லைசென்ஸிற்கு முறையாக விண்ணப்பித்து அதில் தேறிய பின்பே ஆட்டோமெட்டிக் லைசென்ஸ் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த மேனுவல் நடைமுறையில் லைசென்ஸ் பெற விரும்புபவர்களுக்காக தற்போதுள்ள நடைமுறையும் தொடரும்.

அதேவேளை பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவே மேனுவல் லைசென்ஸ் இன்றி ஆட்டோமெட்டிக் லைசென்ஸ் பெற முடியும். ஓமனில் லைசென்ஸ் பெற குறைந்தபட்ச வயது 18. லைசென்ஸ் பெறுவதற்காக குறைந்தது 100 முதல் 800 ஓமானிய ரியால்கள் வரை செலவிட வேண்டியுள்ளது. இப்புதிய சலுகையால் வெளிநாட்டினரும் இனி எளிதாக லைசென்ஸ் பெற முடியும் என ஒமன் வாழ் வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)

அதிரை நியூஸ்: ஜன.29
அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த எம். முகமது புஹாரி அவர்களின் மகனும், மர்ஹூம் 'கோவரசா' என்கிற சேக்தாவூது அவர்களின் பேரனும், முகமது மீராசாஹிப் அவர்களின் சகோதரரும், பிலால் நகரைச் சேர்ந்த கமால், சாதிக் பாட்சா, சேக் முகைதீன், ராவூத்தர், நெய்னா ஆகியோரின் மருமகனுமாகிய நத்தர்ஷா அவர்கள் (வயது 29) நேற்று மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் சாலை மறியல் ~ 55 பேர் கைது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.29
பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.

திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.