.

Pages

Wednesday, January 24, 2018

துபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு சென்ற குடும்பம்!

அதிரை நியூஸ்: ஜன.24
துபை சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2ல் வந்திறங்கிய குடும்பம் ஒன்று தங்களது 3 வயது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டு விட்டு அல் அய்ன் நகருக்கு சென்றனர். குழந்தையை விட்டுச் சென்றவர்கள் ஒரு ஆசிய நாட்டு குடும்பம் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பரிதவித்த குழந்தையை கண்டெடுத்த அதிகாரிகள் சிசிடிவி உதவியுடன் அதன் பெற்றோர்களை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தனர். விமான நிலைய துபை போலீஸ் அதிகாரிகள் தகவல் சொல்லும் வரை தங்களது குழந்தைணை விட்டுவிட்டு வந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. நாங்கள் பெரிய குடும்பம் என்பதால் 2 வாகனங்களில் சென்றோம் எனவே குழந்தை மற்றொரு காரில் இருக்கலாம் என நினைத்தோம் என பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.

சுமார் 3 மணிநேரத்திற்குப் பின் குழந்தை பெற்றோருடன் சேர்க்கப்பட்டது. இதுபோல் கடந்த வருடம் ஈராக்கிய குடும்பம் ஒன்று தங்களது பெண் குழந்தையை மறந்துவிட்டு  சென்றுவிட்ட நிலையில், விமானம் புறப்படும் கடைசி தருணத்தில் துபை போலீஸ் குழந்தையை அக்குடும்பத்துடன் சேர்த்தது என்றும் பயணிகள் தங்களின் லக்கேஜூகளை மறந்து விட்டு செல்வது அடிக்கடி நிகழும் ஒன்று எனவும் தெரிவித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.